டக்லஸ் தேவானந்தா எனும் கொடிய மிருகம் சமீபத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட செய்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு சிங்கள Drug Mafia Underworld Gangsterக்கு தன்னிடமிருந்த துப்பாக்கியை வழங்கிய குற்றத்துக்கு இந்த டக்லஸ் மிருகம் கைது செய்யப்பட்டிருக்கு. தமிழினத்தை சிங்களத்துக்கு காட்டி கொடுத்து, காவு கொடுத்த மிருகங்களில் முதன்மையானவன் இந்த டக்ளஸ். EPRLF பத்மநாபாவின் சீடனான இவன், 80களில் EPRLFஇன் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தான். EPRLFஇன் ராணுவ வீழ்ச்சிக்கு இவனும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தான் என்று சொல்லலாம். பின்னர் இந்திய அமைதி காக்கும் படை EPRLFஐயும் அதன் தலைமையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், இவன் அந்த அமைப்பில் இருந்து விலகி, தனியாக ஒரு அமைப்பை EPDP என்று உருவாக்கி, சிங்கள அரசுடன் இணைகிறான். விடுதலை புலிகள் இயக்கம், மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட கூடிய அனைவரையும், சிங்களத்திடம் காட்டி கொடுத்து, கொன்று குவிக்கும் அடியாள் வேலையை இவன் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்து வந்தான். இவனோடு பயணிக்கும் ஆட்களுக்கு சிங்கள அரசின் தயவால், மாதாந்தம...
பழைய குருடி கதவை திறடி கதையா, கட்சி தொடங்கியதில் இருந்து 24,843 ஆவது தடவையாக மீண்டும் பெரியார் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடக்கி வைத்து, பௌர்ணமிக்கு பௌர்ணமி செத்த குதிரையை அடிக்கும் சடங்கை செய்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. பெரியாரை நாம் தமிழர் எதிர்ப்பதும், தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அதற்காக செலவிடுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாக இருப்பதினால், அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்த நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக விலகி செல்லலாம். ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பின் ஊடாக, திராவிட கட்டமைப்பை வீழ்த்தி விடலாம் என்பதெல்லாம் வெறும் பொய் வெட்டி பிரச்சாரம் என்ற உண்மையையும் நாம் அடிக்கடி நினைவூட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது. திமுக எனும் கட்டமைப்பு பெரியாரையோ, அவரின் தத்துவத்தையோ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பல்ல. பெரியார் எதிர்ப்பு அரசியல் ஊடாக திமுகவை வீழ்த்துவது, கண்ணாடியை திருப்பி வண்டியை start பண்ணும் பம்மாத்து வித்தை தான். திராவிடம் பொருளற்ற ஒரு அரசியல் brandஆக மட்ட...