சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை பகிர ஆசைப்படுகிறேன்.. முதல் அனுபவம் புலிகள் தொடர்பானது. 👇 எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு, பாதை திறந்த சில மாத காலங்களிலேயே நாங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வெளிகிட்டோம்... அப்போதெல்லாம் இயக்கம் சோதனை சாவடியில் pass எடுப்பது, வாகன வரி கட்டுவது என்று நிறைய paper work இருக்கும் , எங்கட அப்பம்மா அதற்கு ஒத்துழைக்க மறுத்து, போராட்டத்தில் எங்கள் குடும்பம் இழந்தவற்றை பற்றி பேசி, அங்கு நின்ற அண்ணன்மாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார். வழக்கமாக சிங்கள ராணுவ சோதனை சாவடிகளில் அமைதியாக இருக்கும் அப்பம்மா, இங்கே புலிகளுக்கு முன் இப்படி தைரியமாக 'அதிகாரிகளுடன்' பேசுவது, ஒரு சிறுவனாய் எனக்கு வியப்பாக இருந்தது.. அப்பம்மாவின் பேச்சில் ஒரு வித கோபம் வெளிப்பட்டது. ஆனாலும் அந்த அண்ணன்மார் சிரித்த முகத்துடன், பக்குவமாக அவர்களின் சட்ட திட்டங்கள், படிவங்கள் நிரப்புவதன் காரணங்கள், அதன் கட்டணங்கள், வரி எங்கு செல்கிறது என்றெல்லாம் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.. ஆனாலும் அப்பம்மா கேட்பதாக இல்லை, குரலை உயர்த்தி பே...
The official website of @mrpaluvets from twitter