"வெளிய முன்னுக்கு தான் கிணறு இருக்கு..
போய் பார்..
இங்க வா!..
இது தான் அறை,
அங்கால குசினி
நடுவுல பாரு திறந்த வெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் முற்றம், அதில் அந்த பக்கதில் கட்டியிருக்கும் ஊஞ்சலை சுத்தி தான் எல்லாரும் இருப்பம்,
இங்க வந்து பார்...
அதுல நிண்டா எப்படி தெரியும்?
இங்க நிண்டு பார்த்தா தான் பாதை தெரியும்..
அங்க தூரத்துல main roadல வாகனங்கள் வரும் சத்தம் இங்க வரைக்கும் கேட்கும்"...

என்று
குண்டுகள் விழுந்து,
குண்டுகள் விழுந்து,
முழுவதுமாய் அடையாளம் தெரியாத அளவுக்கு இடிந்து விழுந்த கட்டிடத்தின்,
கற்கள் கிடந்த திறந்த வெளியில்...
என் பாட்டன், பூட்டன் வாழ்ந்த பூர்விக வீட்டை, இன்னும் இடிந்து விழாத நினைவுகள் ஊடாக,
எனக்கு கட்டி காட்டி மகிழ்ந்த அப்பம்மாவின் முகமும், பெருமை தொனித்த குரலும் தான் மீண்டெழும் எங்கள் தேசத்தின் நம்பிக்கை குரலாய் இன்று வரை எனக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது..
-கிரி
😥
ReplyDelete