கடந்த 10 வருடங்களில் மேற்கொண்ட எனது பயணங்களில்,.. உணவு, இடங்கள், ஊர்கள், என்று நான் எடுத்த சில புகைப்படங்கள்...
நினைவுகளை போல் ஒழுக்கமற்ற
தொகுப்பாய்,
கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..
Randomஆ
இங்கும் அங்குமாக.
.
நீர்கொழும்பு,
சிங்கள தேசம்.
அதிகாலை 4.00 மணிக்கு ..
2017 December.
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி செல்லும் வழியில் உள்ள வைரவர்/முனியப்பர்.. இவரிடம் உத்தரவு வாங்காம கடந்ததில்லை..
2017 December.
2014 அழுத்கமை, பேருவளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக
கலவரம் நடந்த மாதத்தில் அங்குள்ள நண்பர்களை சந்திக்க சென்ற போது எடுத்த புகைப்படம்.
அவிசாவளையில் உள்ள கோவில் ஒன்று..
நாட்டார் தெய்வங்கள் வழிபடப்படும் கோவில்..
யாழ்ப்பாணம்..
கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்..
இலங்கை விமான படையின் தாக்குதலுக்கு பின் மிஞ்சியது..
யாழ் நூலகத்திற்கு, சிறு வயதில் இருந்து நான் சேகரித்து வாசித்த முக்கியமான புத்தகங்களை அன்பளிக்க சென்ற போது, Librarian அக்கா busyஆக UK Prime Ministerக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.
ஈழம்
பாலாவி | மாதோட்டம்...
தலவில அன்னம்மாள் தேவாலயம்.
சிங்கள தேசம்.
அனுராதபுரம்.(2013)
சிங்கள கடை ஒன்றில் காலை உணவை முடித்துவிட்டு
வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன ஓட்டுநர் அண்ணேயிடம்
"உங்களுக்கு கெஹெல்வத்தயில் லவரியா வித்த ரண்சிங்க எனும் பொடியனின் கதை தெரியமோ" எண்டு கேட்டப்படி எடுத்த புகைப்படம் ..
பொலன்னறுவ, 2013
சோழர்கள் உருவாக்கிய நகரம்.
பொலன்னறுவ வேளைக்காரர் படையின் கல்வெட்டு.
'புத்தரின் பல்'ல பாதுகாத்த தமிழ் காவலர்கள். சிங்கள அரசன் விஜயபாகு, சோழர்களுக்கு எதிராக போரிட உத்தரவிட்ட போது, உத்தரவை மறுத்து சிங்களவரக்ளுடன் மோதி வீர காவியமான வீரர்களின் படை வேளைக்காரர் படை.
ஒரு சில வருடங்களுக்கு முன் ஈழத்தில்,. எந்த ஊர் என்று நியாபகம் இல்லை..
தாமரை இலை மேல்
2018, யாழ்ப்பாணம்.
விடிய 6.00 மணி இருக்கும் எண்டு நினைக்கிறன், யாழ்ப்பாணம், நல்லூர் சொக்கர்(ன்) கடையில் காணும் முதல் முகம் மக்கள் திலகம் தான்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில்
Geoffrey Bawaவின் படைப்பு..
எந்த வருடம் எடுத்தது எண்டு நியாபகம் இல்லை.
இங்கே பலமுறை பதிவிட்ட படம் இதுவாக தான் இருக்கும், இருந்தாலும் இன்னொருக்கா,..
பிறகு நண்பர்கள் படை சூழ சாப்பிட போனால், பாலாண்டியும் பரோட்டாவும்
Must have அல்லோ 🙂
எழுத்தும் தமிழும் ...🔥🔥!!!
ReplyDelete//நினைவுகளை போல் ஒழுக்கமற்ற
தொகுப்பாய்,
கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..
Randomஆ
இங்கும் அங்குமாக///
ஈழத்து உணவுகள் ஊடான நினைவுகள் 😍✨