2/2/2017 அன்று நான் எழுதிய ஒரு பதிவை இங்கே மறுபடியும் பதிவிடுகிறேன், லாரன்ஸ் யார் என்பதை நினைவுப்படுத்த
______
மாணவர்களை சந்தித்து சட்ட திருத்தத்தை பற்றி விளக்கம் கொடுக்க வந்தவர்கள் கையில் இருந்து micஐ புடுங்கி போராட்டத்தை எப்போது முடிப்பதென்று நாம் தான் முடிவு செய்வோம் என்று லாரன்ஸ் micஇல் முழங்கினார்.
அங்கே தொடங்கியது அரசியல்.
மெரினாவில் போராட்டம் தொடங்கும் வரை,
ஊடகங்கள் கூடும் வரை,லாரன்ஸ் என்ற மனிதன் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை எங்கும் உச்சரித்ததில்லை.
முதல் நாளில் இருந்து லாரன்ஸ் 10 லட்சம் கொடுத்த விஷயத்த அவரே ஒரு கோடி தரம் விளம்பரம் செய்தார். தப்பில்லை. ஆனால் மெரினாவிலும், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த மற்ற போராட்ட களங்களிலும் இருந்த லட்ச கணக்கான மக்களுக்கு லாரன்ஸ் மட்டும் உதவவில்லை. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் உதவி செய்தார்கள், ஆனால் அவர்கள் யாரும் அதை பெரிதாக விளம்பரம் செய்யவில்லை.
லாரன்ஸ் ஊருக்கு உதவி செய்யுறாரு, உண்மை தான்.
ஆனா லாரன்ஸ் மட்டும் இல்லை, கமல்ஹாசன் நற்பணி இயக்கம், சூர்யாவின் அறம் அறக்கட்டளை, ஏன் லாரன்ஸ் ஊடாகவே நடிகர் விஜய் மற்றும் பல நடிகர்கள் பல உதவிகள் செய்து வருகிறார்கள். ஒரு சராசரி மனிதனை விட அதிகம் சம்பாதிப்பது நடிகர்கள் தான். அவர்களுக்கு சில லட்சங்கள் சில்லறையா கூட இருக்கலாம். ஒவ்வொருத்தர் வருமானத்த பொறுத்து தானே தர்மம் செய்யலாம்?. ஆனா என்ன மற்ற நடிகர்களும் சமூக ஆர்வலர்களும் தாங்கள் செய்யும் உதவிகளை போராட்ட மேடைகளில் அதிகம் விளம்பரப்படுத்தி கொள்வதில்லை.
மெரினாவில் யாரும் சோற்றுக்கு வழி இல்லாமல் வந்து கூடவில்லை. அங்கே கூடிய மக்களுக்கு மீனவர்களும் உதவி செய்தார்கள் மாணவர்களும் உதவி செய்தார்கள், ஆனால் அவர்கள் அதை சொல்லி காட்டவில்லை.. சரி அத விடுங்க.
போராட்டம், தடியடி, காவல்துறை அராஜகம் என்று நாம் விவாதித்து கொண்டிருந்த நேரத்தில் இணையத்தில் ஒரு ஓரத்தில் திரு லாரன்ஸ் அவர்கள் நடித்த 2 படங்களின் trailerஅ சூட்டோட சூடா ரிலீஸ் பண்ணாங்க. அது just like that நடந்ததுன்னு எடுத்துக்குவோம். அதுல ஒரு ஆதாயமும் லாரன்ஸுக்கு இருக்க வாய்ப்பில்லை என்று நம்புவோம். அதை அப்படியே விட்டுருவோம்.
அப்பறம் மாணவர்களுக்கு எதிராக தடியடி நடக்கும் போது, ஆதி சொன்னதையே மறுபடியும் லாரன்ஸும் ஒப்பித்து, காவல்துறை எண்ணப்படி செயல்பட்டார். ஆதி செய்ததை தான் லாரன்சும் செய்தார், ஆதி சொன்னதை தான் லாரன்சும் சொன்னார். சரி அதையும் விடுவோம்.
போராட்டம் முடிவுக்கு வந்த நாள் அன்று, காலையில் காவல்துறை இளைஞர்களை கலைந்து போக சொன்ன போது, 2 மணி நேர அவகாசம் கேட்ட, காவல் துறை சமூக விரோத இயக்கங்கள் என்று வர்ணித்த கூட்டம் தான் லாரான்சுடன் இன்னும் பயணித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் லாரன்சுடன் இருந்த அந்த இளைஞர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.அவர்களுக்கு பதிலாக மீனவர்களை கைது செய்திருப்பார்களாக்கும். எவன் கண்டான்.?
கேட்டா மீனவன் தேசவிரோதி சமூக விரோதி, அவன் போராட்டத்துக்கு பத்து லட்சம் கொடுத்தானாடான்னு கேட்பாங்க.
அதுக்கு பிறகு காவல்துறை நண்பர்கள் அவர்களின் வேலையை காட்டினார்கள். அப்போது அதை லாரன்ஸ் கண்டிக்கவில்லை.
அதுக்கு அடுத்த நாள் முதலமைச்சரையும், பிரதமரையும் நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று ஊடகங்களுக்கு அறிக்கை விட்டார்.
அறிக்கையை தொடர்ந்து முதலமைச்சரை சந்தித்து மாணவர்கள் சார்பில் நன்றி சொன்னாராம்.
முதலமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை லாரன்ஸ் சந்தித்த போது, ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் குழு சார்பாக தான் நாங்கள் முதலமைச்சரை சந்திக்க போனோம் என்று லாரன்சுடன் நின்ற இளைஞர் ஒருவர் தெரிவித்தார். அந்த குறிப்பிட்ட குழு- லாரன்ஸ் குழு.
தலைவரே இல்லாத ஒரு போராட்த்தை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள் பார்த்தீர்களா?
இதெல்லாம் முடிந்த பிறகு நடுக்குப்பத்திற்கு சென்று மறுபடியும் அந்த மக்களுக்கு இன்னொரு 10 லட்சத்த என்னுடன் இருக்கும் மாணவர்கள் ஊடாக கொடுத்து உதவி செய்வேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.
முந்தநாள் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் ஒரு ஊடகவியலாளர் ஏதோ கேள்வி கேட்க, அதை மலுப்ப நான் இவ்வளவு உதவி செய்திருக்கிறேன் என்று இன்னொரு முறை சொல்லி காட்டுகிறார்.
அப்பறம் தேவைபட்டால், சூழல் ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்று சொல்கிறார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அரசியல்வாதிகள், பிரபலங்கள் அற்ற அந்த களத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் லாரன்ஸ். மாணவர்களின் மீது விழுந்த வெளிச்சத்தை அவர் தனது தனிப்பட்ட அரசியலுக்காக பயன்படுத்தி கொண்டார்.
இப்போது ஏன் இந்த தலைமையற்ற மாணவர் போராட்டத்தை தலைமை தாங்க லாரன்ஸ் துடிக்கிறார் என்று கேள்வி கேட்டால்.
அது எப்படி நீ இப்படி கேள்வி கேட்கலாம்.
அவர் எவ்வளவு உதவி செஞ்சிருக்காருன்னு உனக்கு தெரியுமான்னு கேட்குறாங்க.
அப்ப போராட்டத்தின் விலை வெறும் 10 லட்சமா?
அட போங்கடா.
தமிழுடன்
Mr. பழுவேட்டரையர்
எவ்வளவு அழகான தமிழ்!!
ReplyDelete//நினைவுகளை போல் ஒழுக்கமற்ற
தொகுப்பாய்,
கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..
Randomஆ
இங்கும் அங்குமாக...///
உணவுகள் ஊடான நினைவுகள்😍✨✨