Skip to main content

Posts

Showing posts from July, 2020

Mr.பழுவேட்டரையர்

பழுவேட்டரையர் என்ற பெயர் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட பெயர்.  வரலாற்று ஆசிரியர்களுக்கும் இது புதினமான பெயர் அல்ல, அதே நேரம், இது வெறுமனே புதினத்தில் மட்டும் வரும் பெயரும் அல்ல. இது ஒரு உண்மை வரலாற்று கதாபாத்திரத்தின் பெயர்.  சோழர்களின் தளபதியாக இருந்த ஒரு சிற்றரசனன் தான் பழுவேட்டரையர். அவனது பெயரில் ஒரு படையணி கூட சோழர்களின் ராணுவத்தில் இருந்தது. ஈழத்தில் அதிக போர் களங்கள், சண்டைகள் கண்ட படையணி என்ற பெருமை பழுவேட்டரையர் படையணிக்கு இருக்கு. பொன்னியின் செல்வனெனும் வரலாற்று புதினத்தில் பழுவேட்டரையரின் வரலாறு, கதாபாத்திரத்தின் உணர்வுகளால் விழுங்கப்பட்டாலும், அந்த பெயருக்கான வரலாறு, ஆர்வம் கொண்டு தேடினால் எளிதில் கிட்டும். தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பொன்னியின் செல்வனில் பிடித்த கதாபாத்திரமும் பழுவேட்டரையர் தான். போரினால் காயமடைந்த புலிகளை பார்க்கும் போது "பொன்னியின் செல்வனில் வருகின்ற பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத் தழும்புகள் உண்டு" என்று பெரிய பழுவேட்டரையரின் பெருமையை எடுத்துக் கூறி போராளிகளுக்கு தைரியம் கொடுப்பாராம் தலைவர். இந்த காரணங்கள...

கலவரங்கள்

இலங்கையில் நடப்பது அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது எப்போதுமே அடக்குமுறைக்கு எதிரான, வாழ்க்கைக்கான போராட்டாமகவே இருக்கிறது. இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க போரை தொடுக்கவில்லை,  சிங்களம் கால காலமாக போரிட்டு வருவது, இன அழிப்பு என்ற ஒற்றை நோக்குடன் மட்டும் தான். இலங்கையின் அனைத்து விதமான அதிகாரமும் சிங்கள தேசத்தின் கையில் தான் உள்ளது, சிங்கள தேசத்திற்கு எதிராக நின்று தமிழினத்தை காத்த புலிகளும் இன்றில்லை. இருப்பினும் தொடர்ந்து இலங்கையில் கலவரங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. போருக்கு முன்னும் கலவரங்கள், போருக்கு பின்னும் கலவரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது. 83ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒரு உச்சம் அவ்வளவு தான், மற்றப்படி கலவரங்கள் இலங்கையில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. பிற நாடுகளை போல் இலங்கையின் பெரும்பான்மை, சிறுப்பான்மை, மற்றும் பூர்வ குடிகளுக்கு இடையிலான உறவு, ஒற்றையாட்சி, அல்லது பகிர்ப்பட்ட ஒற்றை அடையாளத்தை நோக்கியான பயணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. இலங்கையில் நடப்பது ஒற்றையாட்சி தான். ஒரு குறிப்பிட்ட மதம்,...