பழுவேட்டரையர் என்ற பெயர் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட பெயர். வரலாற்று ஆசிரியர்களுக்கும் இது புதினமான பெயர் அல்ல, அதே நேரம், இது வெறுமனே புதினத்தில் மட்டும் வரும் பெயரும் அல்ல. இது ஒரு உண்மை வரலாற்று கதாபாத்திரத்தின் பெயர். சோழர்களின் தளபதியாக இருந்த ஒரு சிற்றரசனன் தான் பழுவேட்டரையர். அவனது பெயரில் ஒரு படையணி கூட சோழர்களின் ராணுவத்தில் இருந்தது. ஈழத்தில் அதிக போர் களங்கள், சண்டைகள் கண்ட படையணி என்ற பெருமை பழுவேட்டரையர் படையணிக்கு இருக்கு. பொன்னியின் செல்வனெனும் வரலாற்று புதினத்தில் பழுவேட்டரையரின் வரலாறு, கதாபாத்திரத்தின் உணர்வுகளால் விழுங்கப்பட்டாலும், அந்த பெயருக்கான வரலாறு, ஆர்வம் கொண்டு தேடினால் எளிதில் கிட்டும். தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பொன்னியின் செல்வனில் பிடித்த கதாபாத்திரமும் பழுவேட்டரையர் தான். போரினால் காயமடைந்த புலிகளை பார்க்கும் போது "பொன்னியின் செல்வனில் வருகின்ற பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத் தழும்புகள் உண்டு" என்று பெரிய பழுவேட்டரையரின் பெருமையை எடுத்துக் கூறி போராளிகளுக்கு தைரியம் கொடுப்பாராம் தலைவர். இந்த காரணங்கள
The official website of @mrpaluvets from twitter