இலங்கையில் நடப்பது அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது எப்போதுமே அடக்குமுறைக்கு எதிரான, வாழ்க்கைக்கான போராட்டாமகவே இருக்கிறது. இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க போரை தொடுக்கவில்லை,
சிங்களம் கால காலமாக போரிட்டு வருவது, இன அழிப்பு என்ற ஒற்றை நோக்குடன் மட்டும் தான். இலங்கையின் அனைத்து விதமான அதிகாரமும் சிங்கள தேசத்தின் கையில் தான் உள்ளது, சிங்கள தேசத்திற்கு எதிராக நின்று தமிழினத்தை காத்த புலிகளும் இன்றில்லை.
இருப்பினும் தொடர்ந்து இலங்கையில் கலவரங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. போருக்கு முன்னும் கலவரங்கள், போருக்கு பின்னும் கலவரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது. 83ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒரு உச்சம் அவ்வளவு தான்,
மற்றப்படி கலவரங்கள் இலங்கையில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. பிற நாடுகளை போல் இலங்கையின் பெரும்பான்மை, சிறுப்பான்மை, மற்றும் பூர்வ குடிகளுக்கு இடையிலான உறவு, ஒற்றையாட்சி, அல்லது பகிர்ப்பட்ட ஒற்றை அடையாளத்தை நோக்கியான பயணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை.
இலங்கையில் நடப்பது ஒற்றையாட்சி தான். ஒரு குறிப்பிட்ட மதம்,இனம்,சாதியை தாண்டி யாரும் இலங்கை, அதாவது சிங்கள தேசத்தின் அதிகார மையத்தில் அமர முடியாது. இந்த அசாதாரண அநீதியை சாதாரண இயல்பென்று ஏற்கும் கூட்டம் தான் ஸ்ரீ லங்கன்ஸ் என்ற அடையாள அரசியலுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள்.
இங்கே அப்படி உள்வாங்கப்படும் தமிழ், மற்றும் முஸ்லிம் so called Sri Lankansக்கு கூட அந்த ஸ்ரீ லங்கன் என்ற அடையாளம் இதுவரை பாதுகாப்பை உறுதி செய்ததில்லை. சிங்களவனை விட அதிக ஸ்ரீ லங்கன் பற்றுடன் அலையும் முஸ்லிம் சமூகத்தை விட்டு வைத்ததா சிங்கள தேசம்?
அதனால் இலங்கையின் கலவர வரலாறு என்றுமே அரசியல் காரணங்களுக்காக மட்டுமோ, அல்லது ஏதோ ஒரு சம்பவத்திற்கான எதிர்வினையாக மட்டுமே அரங்கேறுவதில்லை. சிங்கள தேசத்தின் அடிப்படை குணாதிசயத்தை வெளிப்படுத்தும் சடங்குகளில் ஒன்று தான் இந்த கலவரங்கள்.
கலவரங்கள் சிங்கள தேசத்திற்கு ஒரு பண்டிகை மாதிரி, அது அவர்களின் கலாச்சாரமாக மாறி நிற்கிறது. அதில் பங்குபெறும் கூட்டம் தண்டிக்கப்படுவதில்லை. அது போர், சமாதானம், என்று காலம் பார்த்து தள்ளிப்போவதில்லை. எந்த தடையும் இன்றி அது அரங்கேறிக்கொண்டே தான் இருக்கும்.
இலங்கையில் நடக்கும் வன்முறைகளில் "எதிர்வினை" ஒரு காரணமாக, நியாயப்படுத்தலாக இருப்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் தான். சிங்கள தேசத்தை பொறுத்தவரை வன்முறை தான் அதன் வினை, குணாதிசயமே.
-Mr. பழுவேட்டரையர்
(23/07/2019)
Comments
Post a Comment