இந்தியா ஆயுதங்களை ஒப்படைக்க சொல்லி கேட்டுக்கொண்டது. புலிகள் அதற்கு இணங்கினார்கள். ஆயுதங்களுடன் தமிழ் இனத்தின் பாதுகாப்பையும் இந்தியாவின் கையில் தேசியத் தலைவர் ஒப்படைத்தார். தன்னை சுற்றி எல்லா திசைகளிலும் பகை சூழ்ந்திருந்த இக்கட்டான அந்த நிலையிலும், இந்தியாவின் வாக்குறுதியை நம்பி, பல மூத்த தளபதிகளின் விருப்பத்துக்கு மாறாக, ஆயுதங்களை இந்தியாவிடம் தலைவர் ஒப்படைத்தார். ராணுவ சீருடையில் இருந்த தலைவர், சிவில் உடைக்கு திரும்பினார். அமைதி வழியில்,இன விடுதலையை நோக்கி பயணித்தார். போர் கருவிகளை கிழே போட்டுவிட்டு, சனநாயக கருவியான அகிம்சையை புலிகள் கையில் எடுத்தார்கள். இந்தியா புலிகளை நம்ப வைத்து ஏமாற்றியது. இந்தியா புலிகளை நிராயுதபாணிகளாக்கிவிட்டு, வேட்டையாட தொடங்கியது. அன்று கோழைத்தனத்தின் முழு வடிவமாக திகழ்ந்தது இந்திய அமைதி காக்கும் படை. தன்னை சுற்றி சூழ்ச்சிகள் அரங்கேறுவதை அவதானித்த தலைவர், சற்றும் தளராது, அகிம்சை வழியில் தொடர்ந்து பயணித்தார். புலிகளின் அரசியல் போராளியாக இருந்த பேரான்மா திலீபன், அகிம்சையின் கரும்புலியாக மாறினான். அகிம்சை எனும் மலையின் உச்சத்தை தொடும் பயணத்தை ஆரம்பித்தான் திலீப
The official website of @mrpaluvets from twitter