தேசியத் தலைவர் மதுரையில் இருந்த காலகட்டத்தில் தான்
பெண் போராளிகளை இயக்கத்துக்குள் இணைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தோன்றியது. பெண் விடுதலை, பெண்ணிய கருத்தியலை இயக்கத்திலும், சமூகத்திலும் விதைப்பதன் ஊடாக தான் பெண்களுக்கான சம அற வெளியை உருவாக்க முடியும் என்று தேசியத் தலைவர் ஆழமாக நம்பினார்.
தலைவரின் அந்த கனவு மெய்ப்பட காரணமாக இருந்த முதன்மையான தளபதி அண்ணன் திலீபன் தான். அண்ணன் திலீபன் உருவாக்கிய 'சுதந்திர பறவைகள்' என்ற பெண்ணிய இயக்கம், தமிழீழத்தின் பழமை வாதங்களை எதிர்த்து களமாடியது.
வெளிப்படையாகவே தமிழ் சமூகத்தின் சில போக்குகளை "காட்டுமிராண்டி"த்தனம் என்றே புலிகள் விமர்சித்தார்கள். சீதனத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,
பெண்களின் சொத்துரிமை பற்றியான பிரச்சாரங்கள். அதை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட தமிழீழ சட்டங்கள் பற்றியான விழிப்புணர்வு..
Gender rolesக்கு எதிரான பிரச்சாரங்கள்,
'ஆணாதிக்கத்தில்' இருந்தான விடுதலை பற்றிய பிரச்சாரங்கள்,
என்று அனைத்து விதமான தளங்களிலும் 'சுதர்ந்திர பறவைகள்' இயங்கின. சமூக மாற்றங்கள்(changing the social construct)சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை,குறிப்பாக ஆணாதிக்கத்தில் இருந்த விடுதலை சார்ந்த அதிகப்படியான அரசியல் பிரச்சாரங்களை தமிழர் தேசத்தில் முன்னெடுத்தது புலிகள் தான்.
பெண்களின் கல்வி பாரம்பரியம், அதன் முக்கியத்துவம் என்று பெண்கள் பற்றிய உரையாடல்கள் அதிகம் நிகழ்ந்தது புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழத்தில் தான்.
பெண்கள் கையில், அரசியல், பொருளாதார நிர்வாகம் வர வேண்டும் என்ற அடிப்படையிலான விழிப்புணர்வு பிரச்சாரம், என்று பெண்ணியம் சார்ந்து புலிகளின் அரசியல் பிரிவு முன்னெடுத்த பிரச்சாரங்கள் எண்ணில் அடங்காது.
இது மட்டுமா, நம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படாத பெண்களின் வரலாறு பற்றிய ஆராய்ச்சிகளிலும் அண்ணன் திலீபன் உருவாக்கிய சுதந்திர பறவைகள் ஈடுபட்டது.. இது அனைத்தும் போர் சூழலில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்.
குண்டு மழை பொழியும் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல், சமூக புரட்சி இது. இது சாதாரண விடயமல்ல.
விடுதலை புலிகள் எனும் ஆயுதம் ஏந்திய ஒரு போராட்ட குழுவின் அரசியல் இயக்கம் தான், ஈழத்தின் பிரதான, வலிமை மிக்க பெண்ணிய இயக்கமாக இருந்தது.
அதை உருவாக்கிய தளபதிகளில் முக்கியமானவர் அண்ணன் திலீபன்.
-Mr. பழுவேட்டரையர்
மிக அருமை சகோதரரே...வாழ்துக்கள்,தொடரவும்.நன்றி...
ReplyDelete