அண்ணன் திலீபன் இந்தியாவிடம் முன்வைத்த 5 கோரிக்கைகளில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வந்த
• ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
என்பதும் ஒன்று.
புலிகள் இந்தியாவிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அகிம்சை வழிக்கு திரும்பிய பின்பு, சிங்கள ராணுவ ஊர்காவல் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஊடாக புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களமும் இந்தியாவும் இங்கும் அங்குமாக அரங்கேற்றி கொண்டிருந்தது.
இந்தியாவின் வாக்குறுதியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுதபாணிகளாக நின்ற புலிகளை இந்த ஊர்காவல் படைகளும், ஒட்டுக்குழுக்களும் வேட்டையாட தொடங்கியது.
இதையெல்லாம் எதிர்த்து தான் திலீபன் அகிம்சை வழியில் போராடினார். 'இந்திய அமைதி காக்கும் படை' புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டதை போல், மற்ற குழுக்களிடம் இருந்தும் ஆயுதங்களை பறித்திருக்க வேண்டும் தானே?
அது தானே முறையான ஒரு "அமைதி காக்கும்" நடவடிக்கையாக இருந்திருக்கும்? அதை தானே திலீபனும் புலிகளும் விரும்பினார்கள்? அப்ப அதை செய்ய ராஜீவ் தயங்கியது ஏன்? இங்கே இந்தியாவின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதா? இல்லை, புலிகளை அழிப்பதா?
புலிகளுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்த ராஜீவ் படை, அந்த ஆயுதங்களை தங்களின் ஒட்டுக்குழுக்களுக்கு வழங்கி புலிகளை வேட்டையாட சொல்லி உத்தரவிட்டது.
இந்தியா துரோகம் செய்தது, புலிகளை முதுகில் குத்தியது. ஆனால் அதற்கும் புலிகளின் உடனடி மறுபதில் அகிம்சை வழி போராட்டமாக தான் இருந்தது. அங்கேயும் இந்தியாவை புலிகள் எதிர்க்க விரும்பவில்லை, ஆனால் இந்தியா திலீபனின் அகிம்சையை தோற்கடித்தது.
"திலீபன் என்ன பெரிய காந்தியா"? என்று சொல்லி அவரது போராட்டத்தை கொச்சைப்படுத்தியது ராஜீவின் வானரம் டிக்சிட்.
தமிழர் தேசத்தில் புலிகளுக்கு இருந்த monopoly on violence, (வன்முறையின் முற்றுரிமை)யை உடைக்கவே இந்தியா புலிகளை நம்ப வைத்து கழுத்தறுக்க துணிந்தது.
புலிகளின் தலைமையின் கீழ் ஈழ விடுதலைக்கான ஒட்டு மொத்த ராணுவமும் அணிவகுத்து நின்றால், சிங்கள State இயங்க தேவையான monopoly on violence தொடர்ந்து சவால்களை சந்தித்து கொண்டே இருக்கும் என்று அஞ்சி, ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஒட்டுக்குழுக்கள் ஊடாக இந்தியம் அரங்கேற்றியது.
திலீபன் இந்தியத்திடம் இல்லாத மனிதம், இருப்பதாக நம்பி பசியுடன் போராடினான். இந்தியா அவன் உயிரை பறித்து, தனது மனிதமற்றத்தன்மையை மீண்டும் நிரூபித்தது.
இந்திய அமைதி காக்கும் படையின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதாக இருந்திருந்தால், திலீபன் மரணத்தை தழுவியிருக்க மாட்டார்.

-Mr. பழுவேட்டரையர்
Comments
Post a Comment