இந்தியா ஆயுதங்களை ஒப்படைக்க சொல்லி கேட்டுக்கொண்டது.
புலிகள் அதற்கு இணங்கினார்கள்.
ஆயுதங்களுடன் தமிழ் இனத்தின் பாதுகாப்பையும் இந்தியாவின் கையில் தேசியத் தலைவர் ஒப்படைத்தார்.
தன்னை சுற்றி எல்லா திசைகளிலும் பகை சூழ்ந்திருந்த இக்கட்டான அந்த நிலையிலும், இந்தியாவின் வாக்குறுதியை நம்பி, பல மூத்த தளபதிகளின் விருப்பத்துக்கு மாறாக, ஆயுதங்களை இந்தியாவிடம் தலைவர் ஒப்படைத்தார்.
ராணுவ சீருடையில் இருந்த தலைவர், சிவில் உடைக்கு திரும்பினார். அமைதி வழியில்,இன விடுதலையை நோக்கி பயணித்தார். போர் கருவிகளை கிழே போட்டுவிட்டு, சனநாயக கருவியான அகிம்சையை புலிகள் கையில் எடுத்தார்கள்.
இந்தியா புலிகளை நம்ப வைத்து ஏமாற்றியது. இந்தியா புலிகளை நிராயுதபாணிகளாக்கிவிட்டு, வேட்டையாட தொடங்கியது. அன்று கோழைத்தனத்தின் முழு வடிவமாக திகழ்ந்தது இந்திய அமைதி காக்கும் படை.
தன்னை சுற்றி சூழ்ச்சிகள் அரங்கேறுவதை அவதானித்த தலைவர், சற்றும் தளராது, அகிம்சை வழியில் தொடர்ந்து பயணித்தார். புலிகளின் அரசியல் போராளியாக இருந்த பேரான்மா திலீபன், அகிம்சையின் கரும்புலியாக மாறினான்.
அகிம்சை எனும் மலையின் உச்சத்தை தொடும் பயணத்தை ஆரம்பித்தான் திலீபன். காந்தியே தொடாத உச்சம் அது, இன விடுதலைக்காக உயிரின் பற்றறுக்கும் பயணம் அது.
அந்த பயணத்தை விரும்பி ஏற்று, எந்த நொடியிலும் முடிவை மாற்றாமல், திரும்பி பார்க்காமல், அகிம்சை எனும் ராஜபாட்டையில் வீர நடை போட்டான் திலீபன்.
அன்று திலீபனின் அகிம்சை வென்றிருந்தால், தமிழர்களின் போராட்டம் வேறு ஒரு திசையில் பயணித்திருக்கும்., அன்று இந்தியா துரோகம் செய்யாமல் நேர்மையாக நடந்திருந்தால், ஒரு பெரும் போரே தவிர்க்கப்பட்டிருக்கும்..
அன்று ராஜீவ் எனும் கொடியவன் தன் தன்முனைப்பை கைவிட்டு, திலீபனின் அகிம்சைக்கு மதிப்பளித்திருந்தால், பல துன்பியல் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். .
அன்று டிக்சிட் எனும் ராஜீவின் வானரம் நல்லூருக்கு வந்திருந்தால், பல தமிழ், இந்திய, சிங்கள, ராணுவ சிப்பாய்கள் கல்லறைக்கு சென்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
ஒரு இன விடுதலை போராட்டத்தின் உச்சக்கட்ட அகிம்சையை நசுக்கியது இந்தியா! புலிகளின் ஆயுதங்களை பறித்துவிட்டோம், இனி இந்த புலிகளால் என்ன செய்ய முடியும்! பட்டினி கிடந்து சாகட்டும் என்று சொல்லி, கொடுத்த வாக்குறுதிகளை முறித்து, தமிழர்களை முதுகில் குத்தியது இந்தியா.
கொப்பனுக்கும் கொப்பன் எப்போதுமே இருப்பான்..
இந்தியா துரோகம் செய்யலாம் என்பதை முன்கூட்டியே கணித்த தலைவர், மக்கள் திலகத்தின் உதவியுடன் ஏற்கனவே இந்தியாவுக்கு வெளியே இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த செய்தி இந்திய உளவுத்துறை அறிந்திருக்கவில்லை.
தாய்த்தமிழகத்தின் அண்ணனையும், தமிழீழத்தின் தம்பியையும் குறைத்து மதிப்பிட்ட டெல்லிக்கு ஒரு பெரும் அதரிச்சி காத்திருந்தது. தீலிபனின் மரணம் நிகழ்ந்த நாள் தான், தலைவர் சிவில் உடையுடன் காட்சியளித்த கடைசி நாள், அதன் பிறகு சாமாதன பேச்சு வார்த்தை காலம் வரை, தேசியத் தலைவர் சீருடையில் மற்றுமே தான் தோன்றினார்.
இந்தியா ஒரு மாபெரும் வரலாற்றுத்தவரை அன்று செய்தது. திலீபனின் மரணம், இந்தியா தனக்கு தானே கொடுத்து கொண்ட மரண அடி.

கனத்த மனதுடன் திலீபன் அண்ணா அவர்களின் தியாகத்தை படித்து தெரிந்து கொண்டேன். ஒரு மனிதனால் இவ்வளவு வைராக்கியத்துடன் இருக்க முடியுமா?? இவரே இரும்பு மனிதர்.
ReplyDeleteநன்றி பழுவேட்டரையர்