நான் நாத்திகனாக இருந்தாலும், மெய்யியல் தொடர்பான எனது வாசிப்புகள் தேடல் என்னை சங்க கால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களிடம் தான் அழைத்து சென்றிருக்கிறது. அது என்றுமே என்னை சத் குருக்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்களிடம் அழைத்து சென்றதில்லை.
மெய்யியலுக்கும், பக்திக்கும் கூட ஒரு பாரம்பரியம் இருக்கு, அதை அறிய ஒரு தேடல் அவசியப்படுகிறது, அந்த தேடலுக்கு ஒரு சுய முனைப்பு தேவைப்படுகிறது.
இருந்த இடத்திலேயே,
அலையாமல்,
தேடாமல்,
சிந்திக்காமல்,
வாதிடாமல்,
நூல்களை, மனிதர்களை, இடங்களை,
வாசிக்காமல்,
யாசிக்காமல்,
"மெய்ஞானம்" என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ஒரு பொருள் உன்னை தேடி வந்தால்,அந்த பொருளை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது விளம்பரமும், வணிகமும் தானே தவிர ஆன்மிகம் அல்ல.
சித்தர்களின் செய்திகள் sponsored postsஇல் வருவதில்லை.
-Mr. பழுவேட்டரையர்
10/2/2021
Comments
Post a Comment