இலங்கையில் சீனாவின் துறைமுக நகர திட்டத்துக்கு ஒரு தனி கொடி, அரசியலமைப்பு மட்டும் தான் இல்லை, மற்றப்படி அது ஒரு சீன colony மாதிரி தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வாகிக்க இருக்கும் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டத்துக்கு எதிராக சிங்கள தேசத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு சார்ந்த சட்டமூலம் இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமான பல அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. அந்த சட்டத்தின் படி ▪️அந்த ஆணைக்குழுவை நிர்வாகிப்பவர்கள் இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையாம். வெளிநாட்டவரும் அதில் இடம்பெறலாமாம். ▪️இலங்கையர்கள் யாரும் இலங்கை currencyஐ வைத்து அந்த நகரத்தில் முதலீடு செய்ய முடியாதாம், இலங்கை வைப்பகத்தில் உள்ள வெளிநாட்டு currencyஐ பயன்படுத்தி கூட இலங்கையர்கள் முதலீடு செய்ய முடியாதாம். ▪️அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்த நகரத்தை மேற்பார்வை செய்யும் ஆணையமே தீர்த்து வைக்குமாம். ▪️துறைமுக நகரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் சம்பள...
The official website of @mrpaluvets from twitter