Skip to main content

Posts

Showing posts from April, 2021

சீன Colonyயாகும் கொழும்பு துறைமுக நகரம்

இலங்கையில் சீனாவின் துறைமுக நகர திட்டத்துக்கு ஒரு தனி கொடி, அரசியலமைப்பு மட்டும் தான் இல்லை, மற்றப்படி அது ஒரு சீன colony மாதிரி தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வாகிக்க இருக்கும் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டத்துக்கு எதிராக சிங்கள தேசத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு சார்ந்த சட்டமூலம் இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமான பல அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. அந்த சட்டத்தின் படி ▪️அந்த ஆணைக்குழுவை நிர்வாகிப்பவர்கள் இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையாம். வெளிநாட்டவரும் அதில் இடம்பெறலாமாம். ▪️இலங்கையர்கள் யாரும் இலங்கை currencyஐ வைத்து அந்த நகரத்தில் முதலீடு செய்ய முடியாதாம், இலங்கை வைப்பகத்தில் உள்ள வெளிநாட்டு currencyஐ பயன்படுத்தி கூட இலங்கையர்கள் முதலீடு செய்ய முடியாதாம். ▪️அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்த நகரத்தை மேற்பார்வை செய்யும் ஆணையமே தீர்த்து வைக்குமாம். ▪️துறைமுக நகரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் சம்பள

உடைகிறதா ராஜபக்ச குடும்பம்?

சீனாவின் கொழும்பு Port City Project/ கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பாக சிங்கள பேரினவாத இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத ராஜபக்ச அரசுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துவிட்டது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின்படி, சீனா தற்போது கொழும்பில் ஒரு கரையோர நகரத்தை கட்டமைத்து வருகிறது.  இந்த நகரம் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்படாமல், ஒரு தனி நாடு போல் இயங்க கூடும் என்ற அச்சம் தற்போது சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அந்த திட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகளும் சிங்கள தேசத்தில் வலுத்து வருகிறது. தற்போது பல சிங்கள பேரினவாத இயக்கங்கள் சீனாவின் Port City Projectக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக சிங்கள தேச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கையில் சீன projectஐ எதிர்க்கும் பௌத்த துறவிகளையும், தனது கட்சியினரையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறார். ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியில் அமர முக்கிய காரணமாக இருந்த Muruttutuwe Ananda Thero எனும் பௌத்த துறவியும் தற்போது ராஜபக்சவுக்கு எதிராக போர் க

சண்டையிட முன் சிந்தியுங்கள்

நமக்கெதிரான அவதூறுகள் பரப்பப்படுவது, நமது எதிர்வினையை எதிர்பார்த்து தான். நமது எதிர்வினை ▪️நம் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை மெய்பிக்க உதவ கூடாது. நமது எதிர்வினை ▪️அவதூறுகளுக்கு வலு சேர்க்க கூடாது. என்பதில் கவனம் தேவை. நாம் எங்கே களமாட வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.  முகலாய மன்னன் Aurangzeb சிறந்த போர் வீரன். அவன் தனது முகலாய பேரரசை விரிவாக்க எல்லைகள் கடந்து போரிட்டான், எல்லா சண்டைகளிலும் கலந்து கொண்டான், இறுதியாக அவன் எல்லையை விரிவாக்க நடத்திய சண்டைகளும், போர்களும், தான் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு ஒரு விதத்தில் காரணமானது. என்ன தான் போர்களில் அவன் வென்றாலும், அவனால் தன் பேரரசின் நீட்சியை உறுதி செய்ய முடியவில்லை. He lost focus on important things. அதனால் நாம் எங்கே, எப்போது யாரோடு சண்டையிடுகிறோம் என்பது முக்கியம். எங்கள் ஒவ்வொரு சண்டையும், எங்களது வலிமையை அதிகரிக்க உதவ வேண்டும், எங்களது முன்னேற்றத்துக்கு அது வழிவகுக்க வேண்டும். எங்களது கவனத்தை எதிரியிடம் சிதறடிக்கும் சண்டைகளை நாம் தவிர்க்க வேண்டும். அனுமானின் வாலை கொளுத்தி பயனில்லை, ராமன் கடல கடக்

வள்ளுவர் வாழ்ந்த காலம்..

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, இந்தியா,  இலங்கை என்று தமிழர் தேசம் வெட்டி  துண்டாப்பட முன் அன்றைய தாய்த்தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் உலகத்திற்கே நெறி வகுத்து கொண்டிருந்தார். அவர் தாடியோடு இருந்தாரா, அவர் வீட்டு திண்ணையில் இருந்து அதை எழுதினாரா, மாளிகையில் இருந்து எழுதினாரா, அவர் எந்த சாதியை சேர்ந்தவர்?, அவர் எந்த மதம்?, என்று அவர் அடையாளம் என்ன, அவர் தாடி அளவு என்ன?, அவர் ஆண்ட பரம்பரையா?,  முற்றும் துறந்த சித்தனா?, பித்தனா? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு இழிவான தமிழ் சூழலில் அவர் பிறக்கவில்லை. அவர் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற சொல் கூட இல்லை, ஒரு ஆரிய கடவுளின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ, சாதியையோ குறிப்பிட்டு பதிவுகள் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்க கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.  எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் ,  எந்த ஒரு அடையாளங்களுக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடனும் எழுதப்பட்ட  திருக்குறள் போன்ற ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?  பிற்காலத்தில் நாற்பொருளில் மை

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி பயங்கரவா

My reading of NTK's political manifesto

Here are some highlights from Naam Tamilar Katchi/NTK's political manifesto that i found interesting. In its manifesto NTK clearly lists out all the fascist policies and programs of BJP that it opposes. NTK opposes Adani's Kaatupalli port expansion, Hydrocarban, Neutrino, Methane and all other projects that seek to destroy the environment. NTK's manifesto also clearly states the reasons as to why it opposes NEET, CAA, NPR, NRC, UAPA, NIA, EIA, etc. It also condemns the new education policies of the BJP Govt and calls it an imposition of the Varnasrama Dharma . It is vital for political parties to put forwards it position on these issues because the Dravidian parties have a track record of betraying people. DMK's support for NIA is a good example of this behaviour. Infact the first manifesto released by  DMK this year had to be revised because it didnt mention its position on matters like the Adani Port Expansion project etc. That is how lightly they ta

திமுகவும் கிரீஸ் டப்பாக்களும்

நாம் தமிழருக்கு எதிரான திமுகவின் நடவடிக்கைகளில் மிகவும் வேடிக்கையான தேர்தல் நேர பிரச்சார நடவடிக்கை என்றால் அது நாம் தமிழரில் இருந்து விலக்கப்பட்ட கிரீஸ் டப்பாக்களை கொண்டு நாம் தமிழரை அவர்கள் தாக்கியது தான். கட்சி தாவும் கிரீஸ் டப்பாக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு போதும் மதிப்பும் மரியாதையும் இருந்ததில்லை. அந்த டப்பாக்கள் ஊடாக நாம் தமிழரை திமுக தாக்கிய போது, திமுகவின் விமர்சனங்கள் எல்லாமே அவதூறுகளாக தான் வெளிப்பட்டது. திமுகவினர் ராஜீவின் பதிவுகளை கண்டு குதூகலித்தாலும், நாம் தமிழர் மத்தியிலோ, மக்கள் மத்தியிலோ அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. This is an old strategy that doesn't work anymore. Nevertheless, it was good for NTK. When your enemy makes stupid mistakes, help them in their course of action. ராஜீவ் போன்றவர்களை பயன்படுத்தி திமுக நாம் தமிழரை தாக்கும் போது ராஜீவின் நம்பகத்தன்மை, நேர்மை, integrityஐ தான் மக்கள் முதலில் சந்தேகித்தார்கள். திமுகவினர் ராஜீவை போன்றோரை தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது, அண்ணன் சீமான் ராஜீவ் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கும்

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும்..

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும், தமிழகத்தின் அரசியல் சூழலை முழுவதுமாக மாற்றியமைக்கும். அந்த மாற்றம் சமூக நீதி, பெண்ணியம் போன்ற தத்துவங்கள், அடிப்படைகள், அதிகார வடிவம் பெற வழி வகுக்கும். சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் பெண்களை, அதுவும் வேட்பாளர்களில் 50% பெண்களை நாம் தமிழர் நிறுத்துவது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தில் எளிதான காரியம் இல்லை. தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வாக்களிக்கிறார்கள். தங்கள் அடிப்படை சனநாயக கடமையை சரிவர செய்து வரும் ஒரு பாலினத்துக்கு, அந்த சனநாயக கட்டமைப்பு, அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யாதது எவ்வளவு பெரிய அநீதி!. அந்த அநீதியை சர்வ சாதாரணமாக நாம் கடந்து செல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!. இந்த லட்சணத்தில் மேடைக்கு மேடை முறுக்கு மீசைகளும், வேட்டிகளும் பெண்ணியம் பற்றி வெட்டி வீர வசனம் வேற பேசி கொண்டு திரிகிறார்கள். இத்தகைய சூழலில் நாம் தமிழர் 50% பெண்களை தேர்தலில் முன்னிறுத்தி களமாடும் போது, கட்சிக்குள் பெண்ணியம் சார்ந்த பார்வை அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயல்பாகவே கடத்தப்படுகிறது. நாம் தமிழரில் பயணிக்கும்