சீனாவின் கொழும்பு Port City Project/கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பாக சிங்கள பேரினவாத இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத ராஜபக்ச அரசுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துவிட்டது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின்படி, சீனா தற்போது கொழும்பில் ஒரு கரையோர நகரத்தை கட்டமைத்து வருகிறது.
-Mr. பழுவேட்டரையர்
18/4/21
இந்த நகரம் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்படாமல், ஒரு தனி நாடு போல் இயங்க கூடும் என்ற அச்சம் தற்போது சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அந்த திட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகளும் சிங்கள தேசத்தில் வலுத்து வருகிறது. தற்போது பல சிங்கள பேரினவாத இயக்கங்கள் சீனாவின் Port City Projectக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக
சிங்கள தேச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கையில் சீன projectஐ எதிர்க்கும் பௌத்த துறவிகளையும், தனது கட்சியினரையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறார்.
ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியில் அமர முக்கிய காரணமாக இருந்த
Muruttutuwe Ananda Thero எனும் பௌத்த துறவியும் தற்போது ராஜபக்சவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார். அவரும் விஜயதாச எனும் ராஜபக்ச கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரும் சமீபத்தில் கோத்தாபய ராஜபக்சவால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்துள்ளதாக ஊடகங்கள் முன் முறையிட்டுள்ளனர்.
அவர்களின் ஊடக சந்திப்பின் பின்னர் பிரச்சனை பெரிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
வெளிப்படையாகவே
சீனாவுக்கு ஆதரவாக அடியாள் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச.
இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்துக்குள் இரண்டு அணிகள்(மகிந்த அணி, கோத்தாபய அணி) உருவாகிவிட்டது என்று சில ஊடகங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறது. மகிந்தவுக்கும் கோத்தாபயவுக்கும் இடையே விரிசல்கள் உள்ளது போல் ஊடகங்கள் சித்தரித்தாலும், உண்மையில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளர்கள் தான் இரு அணிகளாக பிரிந்திருக்கிறார்கள்.
ராஜபக்ஸ சகோதரர்கள் இதுவரை காலமும் தாக்கு பிடிக்க காரணம் மகிந்த ராஜபக்சவின் balancing act தான். மகிந்த கோத்தாபய எனும் இரு சகோதரர்களும் தங்கள் good cop bad cop விளையாட்டை, பிரதமர், ஜனாதிபதி எனும் பதிவுகள் ஊடாகவும் விளையாடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள்.
ராஜபக்ச குடும்பம் தற்போது வலுவிழந்து வருகிறது. அரசியலில் செயல்பட முடியாத அளவுக்கு மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமாகும் போது, ராஜபக்ச குடும்பமும், கட்சியும் உடையும்..அதை சிங்கள பேரினவாதமே நிகழ்த்தி காட்டும் என்று நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு வட்டம்! ❤️🔥
ReplyDeleteஇலங்கை அரசு இந்திய வுடன் சேர்ந்து தேசிய இனத்தை படுகொலை செய்தற்கு கிடைத்த பலன்....
ReplyDelete