பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு,
இந்தியா,
இலங்கை
என்று தமிழர் தேசம் வெட்டி
அன்றைய தாய்த்தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் உலகத்திற்கே நெறி வகுத்து கொண்டிருந்தார். அவர் தாடியோடு இருந்தாரா, அவர் வீட்டு திண்ணையில் இருந்து அதை எழுதினாரா, மாளிகையில் இருந்து எழுதினாரா, அவர் எந்த சாதியை சேர்ந்தவர்?, அவர் எந்த மதம்?, என்று அவர் அடையாளம் என்ன, அவர் தாடி அளவு என்ன?, அவர் ஆண்ட பரம்பரையா?, முற்றும் துறந்த சித்தனா?, பித்தனா? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு இழிவான தமிழ் சூழலில் அவர் பிறக்கவில்லை.
அவர் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற சொல் கூட இல்லை, ஒரு ஆரிய கடவுளின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ, சாதியையோ குறிப்பிட்டு பதிவுகள் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்க கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.
எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் ,
எந்த ஒரு அடையாளங்களுக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடனும் எழுதப்பட்ட திருக்குறள் போன்ற ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?
பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியை கட்டமைத்தாலும், வீடு என்ற தனி மனித பகுத்தறிவுக்கு மட்டுமே புலம்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்த பெருந்தகை எங்கள் வள்ளுவன்.
இவ்வளவு தெளிவான ஒரு படைப்பை படைக்க ஒருவர் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள். மதங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.
அப்படி என்றால் அது எழுதப்பட்ட காலம் எப்படி இருந்திருக்கும்?. இத்தகைய படைப்பை படைக்க அவருக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவனால் இப்படி பட்ட நூலை எழுத முடியுமா?
இதை படைத்தவர் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்
அவர் வாழ்ந்த சுற்றுச்சூழல்,
அவர் சொந்தங்கள்,
அவர் நண்பர்கள்,
அவர் கண்ட அரசர்கள்,
அவர் கொண்ட காதல்,
அவர் கற்ற கல்வி,
அவர் பெற்ற செல்வம்,
அவர் வாழ்ந்த மண்,
அவர் நெறி கற்ற ஆசிரியர்கள்,
அவர் மொழி கற்ற அறிஞர்கள்,
அவர் உண்ட உணவு,
அவர் கண்ட கனவு
எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று சிந்தித்து பாருங்கள்.
எங்கிருந்தோ வந்த புராணங்களையும்,
சித்தாந்தங்களையும் படித்து பூரிக்கும் எம்மவர்கள் நம் முப்பாட்டன் விட்டு சென்ற இச்செல்வத்தை பெரிய அளவில் கொண்டாடாமல் விட்டது ஏன்?.
வள்ளுவனுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே அவர் அடையாளமாக இருக்கிறது. அவர் முகமாக இருக்கிறது. அன்று அவர் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, என்று கண்ட கண்ட அடையாளங்களை ஏற்று பெருமை பேசிக்கொண்டு திரியிறோம்,
இன்று எவன் எவனோ வந்து திருக்குறளை சொந்தம் கொண்டாடுகிறான். அதை ஒரு வேத நூலாக்க பாடுபடுகிறான், வள்ளுவனுக்கு புணூல் கட்டி அசிங்கப்படுத்துகிறான்...ஆனால் அவன் வழி வந்த தமிழ் இனமோ, தமிழம் மறந்து, ராமனையும், கண்ட மட சாமியார்களையும் துதி பாடி கொண்டிருக்கிறது..
-Mr. பழுவேட்டரையர்
திருக்குறள் ஒருவரால் மட்டுமே எழுதப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.ஏன் 11 பேர் கொண்ட குழுவால் எழுதப்பட்டிருக்க கூடாது?🤔
ReplyDeleteஅதேபோல், 3000 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட திருக்குறளின் ஓலைச்சுவடி பழையதாகிவிட்டது என்பதால் 2000 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதிய ஓலைச்சுவடியில் எழுதியதாகக் கூட இருக்கலாமே!
Delete