Skip to main content

தமிழினப்படுகொலை Facts & Figures

#அறிவோம்ஈழம்

தொடர்ந்து தமிழினப்படுகொலை ஒன்று நடக்கவில்லை என்றும், அதை மறுக்கும் விதமாகவும், ஒரு genocide denier மனநிலையுடன், பல அவதூறுகளும் தவறான செய்திகளும் சிங்கள அரசு மற்றும் திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்ப பட்டு வருகிறது. அவற்றில் முதன்மையான அவதூறு இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பானது தான்.

இனப்படுகொலையில், அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட இந்த அவதூறு பரப்பும் மனிதமற்ற காடையர் கூட்டம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அந்த கேடுகெட்ட முயற்சியை முறியடிக்கும் விதமாக இந்த தளத்தில் ஒரு சில ஆவணங்களை, ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைக்கும் முயற்சியை முறியடிக்கும் விதமாக பல மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் பல ஆதாரங்களை திரட்டி, அமபலப்படுத்தி, zero civilian casualty எனும் பெரும் சிங்களப் பொய்யை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்.

அந்த தொடர் முயற்சிகளின் விளைவாக தான் தற்போது அநேகமான உலக அமைப்பு இறுதி போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 40,000,-50,000 என்றளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பல மனித உரிமை அமைப்புகள் அந்த தொகையை 160,000க்கு மேல் என்று ஆதாரங்களுடன் நிறுவி வருகிறார்கள். இதில் முதன்மையான ஆதாரமாக, சாட்சியமாக இருப்பது மறைந்த பெருமதிப்புக்குரிய மன்னார் பேராயர் ஜோசப் இராயப்பு LLRC என்று அழைக்கப்படும் இலங்கையின் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு"விடம் வழங்கிய சாட்சியம் தான்.

அதில் அவர் கொடுத்த தொகையின் விவரம் மற்றும்
▪️UN Crisis Operation Group
▪️UN Panel of Experts
▪️World Bank Household Data
▪️LLRC Submissions
▪️Crisis Group
போன்ற அமைப்புகளின் estimateகளை

South African சட்டத்தரணியாகவும், Nelson Mandelaவின்
South African Truth and Reconciliation Commissionஇன் முன்னாள் Commissionerஆகவும், Ban Ki Moonஇன் expert panel Legal advisorஆகவும், UN Commission on Human Rights in South Sudanஇன் Chair personஆகவும் இருந்த Yasmin Zookaவின் International Truth and Justice Project எனும் மனித உரிமை அமைப்பு 2021இல்
வெளியிட்ட Death Toll in Sri Lanka's 2009 war என்ற அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் இறுதிப்போரில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,976ஆக உயர்ந்திருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் range 80,000இல் இருந்து 170,000 வரையில் இருக்கிறது.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை
TNA estimateபடி  87,620
LLRC Submission Estimate 147,000
World Bank Household data estimate 169,796
Crisis Group estimate 100,000

மேலே பகிரப்பட்டிருக்கும் அறிக்கையின் source file கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி
Mr.பழுவேட்டரையர்.



Comments

  1. உங்களின் இந்த ஆக்கபூர்வமான பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

Shoba Shakthi & Tamil Solidarity Group's 'Group Sex Ideology'

I just dont know where to start, but this story needs to be told. In the last few years I've gained insights into internal problems within numerous Dravidian groups in Tamil Nadu and abroad through interactions on Clubhouse with the current and ex-members of such groups, and in this blog, I aim to shed light on such groups and activists linked to cases of sexual exploitation.  Firstly I would like to discuss about Shoba Shakti. A few months ago, a fellow comrade shared an old article on Shoba Shakthi from a website called Keetru. This article was written by a Human Rights activist called Thamizhachi who was based in France. The article is all about the sexual harrasment Thamizhachi faced through Shoba Sakthi.  Shobha Shakti is an activist/author who operates from France. He is an Sri Lankan Tamil who has made a name by being very critical about the Tamil struggle in Eelam. He calls himself a Dalit/Dravidian activist or Periyarist and is closely connected to

அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலின் சாதிய கொலை

இந்த மாதம் 13 திகதியன்று, யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் & கொலையை சுற்றி நிறைய கதைகளும், கட்டு கதைகளும் சமூக வலைத்தளங்களில் பின்னப்படுவதை காண கூடியதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களில் உண்மையோடு சேர்ந்து உண்மையான குற்றவாளிகளும் கதையோடு கதையா தொலைந்து போகிறார்கள். அதனால் நடந்த சம்பவத்தை பற்றியும், அதில் சாதியவாதத்தின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவு ஊடாக நாம் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இந்த பிரச்சனை பொன்னாலையில் இருந்து தொடங்கவில்லை.  2021/2022ஆம் ஆண்டு கால பகுதியில், அடைக்கலந் தோட்டம் கோவிலில் தான் இந்த பிரச்சனை தொடங்கியது.  13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பவித்திரன் என்ற இளைஞன் வட்டுக்கோட்டையில் உள்ள அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வந்திருக்கிறார்.  கோவிலை சுற்றி வாழும் மக்கள் மத்தியில் வேளாளர்கள் மட்டும் முக்குவர் சமூகத்தை சேர்ந்த மக்களும் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்