ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு. சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல். தமிழ் மொழியில் சம்பன் ...
The official website of @mrpaluvets from twitter