ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு.
சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது
சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது.
சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல்.
தமிழ் மொழியில் சம்பன் 'சம்மன்' ஆனது,
சிங்கள மொழியில் அது 'ஹம்பன்'ஆனது
இதன் அடிப்படையில் கடல் வழி வணிகம் செய்ய வந்தவர்கள், கரையோரத்தில் வாழ்ந்தவர்கள் என்று அணைவரையும் சிங்களவர்கள் 'ஹம்பன்காரயா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு மதத்தினரை மட்டும் குறிக்கும் சொல்லாக சிங்களத்தில் மாறியது.
இலங்கையில் வாழ்ந்த கரையோர தமிழ், சிங்கள மக்கள், Portugueseஇன் வருகைக்கு பிறகு மதம் மாறியது மட்டுமன்றி, தங்கள் ஆடைகளையும் மாற்றி கொண்டார்கள். சாரம், அதிலும் குறிப்பாக coloured சாரங்கள் என்பது அதிகம் கரையோர மக்களின் ஆடையாகவே Upcountry சிங்களவர்களால் பார்க்கப்பட்டது.
சிங்களவர்களை 'ஆரியர்களாக' முன்னிறுத்திய, சிங்கள தேசியத்தின் தந்தை தர்மபால, சிங்களவர்களில் உள்ள "தூய இன சிங்களவர்களான" மேல்நாட்டு சிங்களவர்களின் ஆரிய ஆடை கலாச்சாரமே "தூய சிங்கள கலாச்சாரம்" என்று அறிவித்தார். கரையோர மட்டும் Non Kandyan rural சிங்களவர்களை அவர்க்ளை போல மாற சொன்னார்.அதுவரை சாரம் உடுத்தி வந்த சிங்களவர்களிடம் coloured சாரங்களை தவிர்த்து விட்டு, வெள்ளை சாரங்களை அணிய சொன்னார்.
அதை அநாகரிக தர்மபால எப்படி சொன்னார் தெரியுமா? "சிங்களனே! ஹம்பயா மாதிரி சாரம் உடுத்துவதை நிறுத்து" என்றார்.
'ஹம்பன்காரயா' என்று முஸ்லிம்களை குறிக்கும் சொல்லை, "ஹம்பயா" என்ற இழி சொல்லாக மாற்றி இங்கு பயன்படுத்தினார் தர்மபால.
சம்மாந்துறை(சம்பன் துறை) ஹம்பான்தோட்ட(சம்பன் தோட்ட) போன்ற பல கடலோர பகுதிகளின் பெயராக இருந்த சம்மான்/ஹம்பான் என்ற அடையாளத்தை just like that ஒரு இழி சொல்லாக மாற்றினார் தர்மபால.
'பறையன்' என்ற சொல் சிங்களத்தில் 'பற தெமலா/தமிழா' ஆனது போல்,
சக்கிலியன் என்ற சொல் சிங்களத்தில் 'சக்கிலி தெமலா' ஆனது போல்,
ஹம்பன்காரயாவை சிங்களத்தில் ஹம்பயா என்ற இழி சொல்லாக, ஒரு இனத்தை தாழ்த்தும், இழிவுப்படுத்தும் சொல்லாக மாற்றினார் தர்மபால.
Don't wear only a sarong like the Hambaya,
Don't expose the body like the Vedda,
Don't wear a head comb like the Javanese என்றார் தர்மபாலா.
இலங்கையில் சிங்கள ஆதிக்க சாதியினர், தங்களை கூலி தொழிலாளர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட, தலையில் ஒரு சீப்பை இப்படி வைத்திருப்பார்கள்.
இதை எல்லாம் தவிர்த்து விட்டு, சிங்கள ஆரிய ஆடை கலாச்சாரத்தை பின்பற்றுமாறு கட்டளையிட்டார் தர்மபால. சிங்களவர்கள் கருப்பு ஆடைகளை தவிர்த்து 'வெள்ளை' நிற ஆடைகளை தான் தங்கள் தேசிய ஆடைகளாக அணிய வேண்டும் என்றார் தர்மபால.
சிங்களவர்கள் அதிகம் "வெள்ளை" நிற ஆடைகளை பயன்படுத்துவது தங்களை தூய சிங்களவர்களாக அடையாளப்படுத்த தான். தமிழர் தேசத்தில் ஆறுமுக நாவலரும் இப்படி சைவர்களுக்கு வேறு விதமான சட்டங்கள் போட்டார். ஆனால் தமிழர்கள் இதை எல்லாம் கணக்கெடுக்கேல. நமக்கு சாரம் தோது தான் 🙂
நன்றி
Mr.பழுவேட்டரையர்
19/3/2020
Comments
Post a Comment