ஈழத்தில், விடுதலை புலிகள் என்ற இயக்கம், ஈழத்தின் தனிப்பெரும் இயக்கமாக, ராணுவமாக, உலகத்தமிழினத்தின் முகவரியாக மாற காரணங்கள் பல இருக்கிறது, ஆனால் எல்லா காரணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, மக்கள் விடுதலை புலிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை தான். மக்களின் நம்பிக்கையை விடுதலை புலிகள் எப்படி வென்றெடுத்தார்கள் என்பதை பற்றி சமீபத்தில் Studies in Conflict and Terrorism journalஇல் வந்த ஒரு ஆய்வு கட்டுரை ஆராய்கிறது. அந்த ஆய்வு கட்டுரையின் விவரம் மற்றும் இணைப்பு👇 Kate Cronin-Furman & Mario Arulthas (2021): How the Tigers Got Their Stripes: A Case Study of the LTTE’s Rise to Power, Studies in Conflict & Terrorism, DOI: 10.1080/1057610X.2021.2013753 இந்த ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய செய்திகளை இங்கே உங்களுடன் பகிர விரும்புகிறேன்.. புலிகள் தனிப்பெரும் இயக்கமாக மாறியிருக்காவிட்டால், ஒரு சுதந்திர தமிழீழ அரசை உருவாக்கும் அளவுக்கான வளர்ச்சியை ஈழ விடுதலை போராட்டம் எட்டியிருக்காது. இது தொடர்பான ஒரு தெளிவான பார்வையை தராகி சிவராம் அவரது கட்டுரைகளில் முன்வைக்கிறார், அதை ப...
The official website of @mrpaluvets from twitter