ஈழத்தில், விடுதலை புலிகள் என்ற இயக்கம், ஈழத்தின் தனிப்பெரும் இயக்கமாக, ராணுவமாக, உலகத்தமிழினத்தின் முகவரியாக மாற காரணங்கள் பல இருக்கிறது, ஆனால் எல்லா காரணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, மக்கள் விடுதலை புலிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை தான்.
மக்களின் நம்பிக்கையை விடுதலை புலிகள் எப்படி வென்றெடுத்தார்கள் என்பதை பற்றி சமீபத்தில் Studies in Conflict and Terrorism journalஇல் வந்த ஒரு ஆய்வு கட்டுரை ஆராய்கிறது.
அந்த ஆய்வு கட்டுரையின் விவரம் மற்றும் இணைப்பு👇
Kate Cronin-Furman & Mario Arulthas (2021): How the Tigers Got Their
Stripes: A Case Study of the LTTE’s Rise to Power, Studies in Conflict & Terrorism, DOI:
10.1080/1057610X.2021.2013753
இந்த ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய செய்திகளை இங்கே உங்களுடன் பகிர விரும்புகிறேன்..
புலிகள் தனிப்பெரும் இயக்கமாக மாறியிருக்காவிட்டால், ஒரு சுதந்திர தமிழீழ அரசை உருவாக்கும் அளவுக்கான வளர்ச்சியை ஈழ விடுதலை போராட்டம் எட்டியிருக்காது. இது தொடர்பான ஒரு தெளிவான பார்வையை தராகி சிவராம் அவரது கட்டுரைகளில் முன்வைக்கிறார், அதை பற்றி பிறகு வேறொரு பதிவில் ஆராய்வோம்.
இப்போது இந்த ஆய்வு கட்டுரை சொல்லும் செய்திக்கு வருவோம்.
80களின் ஆரம்ப பகுதிகளில் வெறுமனே இளைஞர்களின் எழுச்சியாக மட்டுமே பார்க்கப்பட்ட ஆயுத போராட்டம், பிறகு மெல்ல மெல்ல தனித்துவ கட்டமைப்புகள் கொண்ட இயக்கங்களின் போராட்டமாக 80களின் நடுப்பகுதியில் அறியப்பட ஆரம்பிக்கிறது.
அந்த காலகட்டத்தில் ஆட்பலம், ஆயுதபலம் குறைவாக இருந்த போதிலும், ஊடகங்களின் பார்வையில் விடுதலை புலிகள் இயக்கம் மட்டும் தான் போராட்ட இயக்கங்களிலேயே முதன்மையான இயக்கமாக விளங்கியது.
இதற்கு முக்கியமாக மற்ற இயக்கங்களுக்குள் நடந்த 'சகோதர யுத்தமே' காரணமாக இருந்தது.
(Emphasis on மற்ற இயக்கங்களுக்குள், இயக்களுக்கிடையே அல்ல!)
சகோதர யுத்தம் என்பது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் சொன்னது போல இயக்கங்களுக்கிடையே நடக்கவில்லை. முதலில் சகோதர யுத்தம் ஒவ்வொரு இயக்கங்களுக்குள்ளே தான் நடந்தது. TELO இயக்கத்துக்குள் நடந்த குழு சண்டை, PLOTEக்குள் நடந்த தலைமைத்துவ பதவி சார்ந்த சண்டை, EPRLFக்குள் நடந்த குழு சண்டை போன்றவை தான் அந்த இயக்கங்களின் நிலையற்றத்தன்மைக்கும் பிறகு வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது என்ற செய்தி அந்த ஆய்வு கட்டுரையில் வெளிப்படுகிறது.
கட்டுரையில் குறிப்பிடப்படாத இன்னொரு செய்தியையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்த காலகட்டத்தில், அவை இயக்கங்களாக இருந்த நிலை போய், மெல்ல மெல்ல ஒட்டுக்குழுக்களாக பரிணாமிக்க ஆரம்பித்தது.
சிந்தித்து பாருங்கள் இந்த இயக்கங்களில் உள்ள இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தது, ஆனால் அவர்கள் இயக்கங்களில் கட்டுப்பாடு, ஒழுக்கம், நோக்கம், நல்ல தலைமைத்துவம் என்று எதுவும் இல்லை. இந்த குழப்பகர சூழல் தொடர்ந்து நீடித்திருந்தால், போராட்டம் எளிதில் திசைதிரும்பியிருக்கும்.
விடுதலை போராட்டம் சரியாக முன்நகர வேண்டுமெனில் அந்த போராட்டம் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டிய தேவை இருந்தது, வன்முறைக்கான முற்றுரிமை ஒரு இயக்கத்திடம் இருக்க வேண்டிய தேவை இருந்தது. அந்த தேவையை உணர்ந்து, உடைந்து கொண்டிருந்த இயக்கங்களில் இருந்த போராளிகளை உள்வாங்கி கொள்ள ஆரம்பித்தார்கள் விடுதலை புலிகள்.
மற்ற இயக்கங்கள் ராணுவரீதியாக சரிந்த பிறகும், போராட்டம் எந்த பின்னடைவையும் சந்திக்காது முன்நகர கூடியதாக இருந்தது!
இதுவே, போராட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது புலிகள் தான் என்பதை உணர்த்துகிறது.
மற்ற இயக்கங்களின் ராணுவ வீழ்ச்சியை தொடர்ந்து, அந்த இயக்கங்கள் வெளிப்படையாகவே இந்திய அமைதி காக்கும் படையின் ஒட்டுக்குழுக்களாக இயங்க ஆரம்பித்தார்கள். இந்தியாவை எதிர்த்த கும்பல் சிங்கள அரசின்/ ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறினார்கள்.
உண்மையிலேயே தமிழீழ விடுதலை மீது அர்ப்பணிப்பு உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், எதிரியின் பங்காளிகளாக மாறியிருப்பார்களா?
இதிலிருந்து போராட்டத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு எந்தளவுக்கு இருந்தது என்று உங்களால் ஓரளவுக்கு கணக்கிட கூடியதாக இருக்கிறது அல்லவா?
எதிரியுடன் இணைந்து கடைசியாக மக்களுக்கு எதிராகவே இந்த ஒட்டுக்குழுக்கள் இயங்க தொடங்கின, காட்டி கொடுத்தல், கூட்டி கொடுத்தல் என்று தரங்கெட்ட அனைத்து வேலைகளிலும் அவர்கள் ஈடுபட்டார்கள்.
அந்த சூழலில் ஒழுக்கம், கட்டுப்பாடு, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இயக்கமாக, விடுதலை புலிகள் மட்டும் தான் விளங்கியது.
மக்கள் நம்பிக்கையை புலிகள் வென்றார்கள்,
மக்கள் புலிகளின் ஒழுங்கை ஏற்றுக்கொண்டார்கள்,
புலிகளின் நடவடிக்கைகளில் அறம் இருந்தது என்பதை புரிந்து கொண்டார்கள்.
இன்று வரை ஒட்டுக்குழுக்களால் புலிகள் அளவுக்கு மக்கள் மனதை வெல்ல முடியாமல் இருப்பதற்கு இந்த வரலாறு தான் காரணம்..
ஒட்டுக்குழுக்களை ராணுவரீதியாக வீழ்த்திய போதிலும், அவர்களின் சனநாயக குரல்களை புலிகள் நசுக்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் அவர்களையும் இணைத்து கொண்டு தான் தமிழர்களுக்க்கான ஒரு புது அரசியல் வெளி உருவாக்கப்பட்டது.
முதல் மாவீரர் நாள் உரையில் கூட தேசியத் தலைவர், மற்ற இயக்கங்களில் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த உறவுகளையும் நினைவுகூர சொன்னார்.
தலைமைகளின் தவறான வழிகாட்டலில் அவர்கள் போராட்டம் சீர்குலைந்தாலும், விடுதலைக்கான அவர்களின் உயிர் கொடையை அங்கீகரித்து, நினைவுகூர வேண்டும் என்று போதித்தார் தலைவர்.
தங்களை அழிக்க வந்த எதிரியையும், துரோகியையும் கூட இறுதி வரை மாண்புடன் தான் புலிகள் நடத்தினார்கள்..
தொடரும்..
-Mr. பழுவேட்டரையர்
9/3/2022

👌
ReplyDelete