முன்னொரு காலத்தில் தமிழ் மொழி உரிமைக்காக, தனி சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடிய ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான ஒரு அற வழி போராட்டத்தின் களமாக இருந்த கொழும்பின் பிரபல கடற்கரை ஓரமான காலி முகத்திடல், கடந்த சில மாதங்களாக சிங்கள தேசத்தின் inconvenienced group of peopleஇன் தற்காலிக குடியிருப்பாக மாறி இருக்கிறது. அந்த குடியிருப்பின் இருப்பால் சிங்கள அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆளும் கட்சியின் இருப்புகள், இருக்கைகள், இருக்கையை பற்றிக்கொண்ட அவர்கள் உடல் தசைகள் எல்லாம் தீ பிடித்து எரிந்தது. சிங்கள தேசத்தில் நடந்த இந்த திடீர் கிளர்ச்சி, ராஜபக்ச குடும்பத்தையே சிவப்பு துண்ட காணோம், போட்டிருந்த ஜட்டிய காணோம் என்று ஓட வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த கிளர்ச்சி, இந்த அசாதாரண சூழல் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அது அந்த நாட்டின் எதிர்கட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவோ கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தனக்கு வாய்ப்பு வடிவில் எத்தனை வடை வந்தாலும், அதை கசக்கி, பிழிந்து தூக்கி வீசிவிட்டு வடை போச்சே என்று பின்னர...
The official website of @mrpaluvets from twitter