Skip to main content

Posts

Showing posts from July, 2022

சஜித் பிரேமதாசா எனும் மகாதத்தி

முன்னொரு காலத்தில் தமிழ் மொழி உரிமைக்காக, தனி சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடிய ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான ஒரு அற வழி போராட்டத்தின் களமாக இருந்த கொழும்பின் பிரபல கடற்கரை ஓரமான காலி முகத்திடல், கடந்த சில மாதங்களாக சிங்கள தேசத்தின் inconvenienced group of peopleஇன் தற்காலிக குடியிருப்பாக மாறி இருக்கிறது. அந்த குடியிருப்பின் இருப்பால் சிங்கள அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆளும் கட்சியின் இருப்புகள், இருக்கைகள், இருக்கையை பற்றிக்கொண்ட அவர்கள் உடல் தசைகள் எல்லாம் தீ பிடித்து எரிந்தது. சிங்கள தேசத்தில் நடந்த இந்த திடீர் கிளர்ச்சி, ராஜபக்ச குடும்பத்தையே சிவப்பு துண்ட காணோம், போட்டிருந்த ஜட்டிய காணோம் என்று ஓட வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த கிளர்ச்சி, இந்த அசாதாரண சூழல் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அது அந்த நாட்டின் எதிர்கட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவோ கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தனக்கு வாய்ப்பு வடிவில் எத்தனை வடை வந்தாலும், அதை கசக்கி, பிழிந்து தூக்கி வீசிவிட்டு வடை போச்சே என்று பின்னர

தேவை ஒரு Task Force

கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும். தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது. தாயகம் திரும்பியவுடன் கூட்டமைப்பு, முன்னணி என்ற இரண்டு முதன்மை கட்டமைப்புகளின் தலைமைகளும் இணைந்து ஒரு சந்திப்பை நடத்த வேண்டும். அந்த சந்திப்பில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழர் தேசத்தை மீட்க ஒரு தனி bi partisan task force ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த task force எந்த கட்சி பிரச்சரங்களிலும் ஈடுபடாது, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன், தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரில் இருந்தும் நெருக்கடி பாதிப்பு குறித்தான தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும். இந்த பணியில் இரு கட்சி தொண்டர்களும் தலைமைகளும் இணைந்து செ