கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும்.
தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது.
தாயகம் திரும்பியவுடன் கூட்டமைப்பு, முன்னணி என்ற இரண்டு முதன்மை கட்டமைப்புகளின் தலைமைகளும் இணைந்து ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்.
அந்த சந்திப்பில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழர் தேசத்தை மீட்க ஒரு தனி bi partisan task force ஒன்றை உருவாக்க வேண்டும்.
இந்த task force எந்த கட்சி பிரச்சரங்களிலும் ஈடுபடாது, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன், தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரில் இருந்தும் நெருக்கடி பாதிப்பு குறித்தான தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த பணியில் இரு கட்சி தொண்டர்களும் தலைமைகளும்
இணைந்து செயல்பட வேண்டும். இதில் ஒரு பக்கம் தரவு சேகரிப்பு நடக்கும் போது, மற்ற பக்கம் இரு கட்சி தலைமைகளும், முதன்மை முகங்களும், ஒன்றாக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து பேச வேண்டும். கூட்டங்கள் நடத்தி நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.
சேகரிக்கப்படும் தகவல்கள் வழி, உடனடி தேவைகளை மதிப்பீடு செய்து, அவற்றை எவ்வாறு மக்களுக்கு வழங்கலாம் என்ற logistics பற்றி திட்டங்களை அந்த task force வகுக்க வேண்டும்.
முக்கிய இரு கட்சி அரசியல் பிரமுகர்கள் இணைந்து அவற்றை நடத்தி முடிக்க தேவையான பணத்தை திரட்ட ஒரு NGO வை உருவாக்க வேண்டும். அதன் நடவடிக்கை fully transparent ஆ இருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட NGOவுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக பணத்தை அனுப்பி வைக்க வழி அமைத்து கொடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஊர்கள், மக்களுக்கு உடனடியாக உதவிகள் போய் சேரும் விதம் ஒழுங்கமைப்புகள் எல்லாம் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஊடாக, நமது தேசத்தை ஒருங்கிணைத்து,
ஒரு collective ஆ எங்கள் strength அ நாங்கள் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.
இதன் ஊடாக தென்னிலங்கைக்கு நம் மக்கள் ஒரு பாடத்தை படிப்பிக்கலாம்.
வட கிழக்கில் எம்மவர்கள் தெருவில் நிற்க வேண்டிய தேவை இல்லாத ஒரு நிலையை உருவாக்கி காட்டுவது தான் அந்த task force இன் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நம்மை நிர்வாகிக்க நாமே போதும் என்று காட்ட வேண்டும்.
சிவில் சமூகத்தின் இயக்க வெளியை அதிகார வெளி மட்டுமே தீர்மாணிக்காது என்பதை உணர்த்த இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
-Mr. பழுவேட்டரையர்
12/07/2022
Comments
Post a Comment