கருணாநிதியும் ராஜபக்சவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
ஈழத்தில், ஈழம், தமிழீழம் என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு தடை போட்டான் ராஜபக்ச!
தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லே இனி எந்த அரசியல் மேடைகளிலும் பயன்படுத்த கூடாதென்று உத்தரவிட்டார் கருணாநிதி.
ஈழத்தில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்து தரமட்டமாக்க உத்தரவிட்டான் ராஜபக்ச.
தமிழகத்தில் எங்கும் தேசியத் தலைவரின புகைப்படங்கள் இருக்க கூடாதென்று திமுக ஆட்சியில் உத்தரவிட்டார் கருணாநிதி.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தினான் ராஜபக்ச!
தமிழகத்தில் இறுதி கட்ட போரின் போது நடந்த போர் குற்றங்களின் ஆவணங்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க முயற்சித்த தமிழர்களை சிறைப்படுத்தினார் கருணாநிதி. இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியை தடை செய்தார் கருணாநிதி.
ஈழத்தில் உலக நாடுகளால் தடை செய்ய பட்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று பொய் உரைத்தான் ராஜபக்ச!
ஈழத்தில் போரை நிறுத்திவிட்டேன் என்று வாய் கூசாமல் பொய் உரைத்தார் கருணாநிதி.
உலக பிரதிநிதிகளை ஈழத்திற்கு அழைத்துவந்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது பாருங்கள் என்றொரு நாடகத்தை அரங்கேற்றினான் ராஜபக்ச!
அந்த நாடகத்திற்கு தனது கூத்து பட்டறையில் இருந்து அரசியல் நடிகர்களை ஈழத்திற்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.
ஈழத்தில் உரிமைக்காக போராடும் தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள்னு குற்றம் சாட்டி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறான் ராஜபக்ச!
தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக போராடிய தமிழர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் என்று சொல்லி கைது செய்தார் கருணாநிதி!
தேசியத் தலைவரின் பெற்றோரை சிறைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அந்த முதியவர்களை துன்புறுத்தினான் ராஜபக்ச.
மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகம் வந்த அந்த தாயை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் விரட்டினார் கருணாநிதி.
தமிழர்கள், தமிழர்கள் சார்ந்த உரிமைகள் என்று பேசினாலே அது பிரிவினைவாதம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறான் ராஜபக்ச!
தமிழர்கள் என்று சொன்னாலே பாசிசம் என்று சொல்லி தமிழர்களின் குரல் வலையை நசுக்குகிறது திமுக!
ராஜபக்ச தனது தமிழ் பேசும் அடிவருடிகளை கொண்டு ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் எதிரான வன்ம, வெறுப்பு பிரச்சாரங்களை இன்னும் நடத்தி வருகிறான்..
ராஜபக்ச கூட்டம் செய்யும் அதே பிரச்சாரங்களை தான் உடன்பிறப்புக்களும் இன்று சமூக வலைதளங்களில் செய்து வருகிறார்கள்.
-Mr. பழுவேட்டரையர்
28/11/21
Comments
Post a Comment