ஊடகம் என்பது சனநாயகத்தின் தூண், சமையல் அறை, balcony என்றெல்லாம் நான் இங்க வகுப்பெடுக்க விரும்பவில்லை. ஊடகமும் இன்றைய காலத்தில் ஒரு வியாபாரம் தான். ஆனால் அந்த வியாபரத்திலும் ஒரு அறம் இருக்க வேண்டும். விளம்பரம் என்பது செய்திகளுக்கு இடையில், இடைவெளியில் வந்தால் தப்பில்ல... ஆனால் விளம்பரமே செய்தியாக வர கூடாது! தற்போது தமிழ்நாட்டில் நடப்பது இந்த 'விளம்பர செய்தி' கூத்து தான். ஒட்டுமொத்த ஊடகங்களும் 'செய்திகளை', தங்களுக்கு அதிக பணம் கொடுக்கும் விளம்பரதாரர்களுக்கு ஏற்ப மாற்றி கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமா? தேவைப்பட்டால் அந்த விளம்பரதாரர்களுக்காக ஊடக அடியாளாக கூட இறங்கி வேலை செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அடியாட்களுக்கான ஆள் சேர்ப்பு கூட்டத்தில் தான் மதனின் sting அல்லது stink'ing(நாத்தம்) operation நடந்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்று ஏதோ சொல்வார்களே. அதை மெய்ப்பிக்கும் விதமாக பாம்பாக இருந்த மதன்.. இப்போது ஏதோ ஒரு மேலிடத்தின் உத்தரவு அல்லது அனுசரணையுடன், படம் எடுத்திருக்கிறார். இந்த so called Sting operationல மதனுக்கு துணையா இருந்தது, கிட...
The official website of @mrpaluvets from twitter