ஊடகம் என்பது சனநாயகத்தின் தூண், சமையல் அறை, balcony என்றெல்லாம் நான் இங்க வகுப்பெடுக்க விரும்பவில்லை. ஊடகமும் இன்றைய காலத்தில் ஒரு வியாபாரம் தான். ஆனால் அந்த வியாபரத்திலும் ஒரு அறம் இருக்க வேண்டும்.
விளம்பரம் என்பது செய்திகளுக்கு இடையில், இடைவெளியில் வந்தால் தப்பில்ல... ஆனால் விளம்பரமே செய்தியாக வர கூடாது!
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது இந்த 'விளம்பர செய்தி' கூத்து தான்.
ஒட்டுமொத்த ஊடகங்களும் 'செய்திகளை', தங்களுக்கு அதிக பணம் கொடுக்கும் விளம்பரதாரர்களுக்கு ஏற்ப மாற்றி கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமா? தேவைப்பட்டால் அந்த விளம்பரதாரர்களுக்காக ஊடக அடியாளாக கூட இறங்கி வேலை செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அடியாட்களுக்கான ஆள் சேர்ப்பு கூட்டத்தில் தான் மதனின் sting அல்லது stink'ing(நாத்தம்) operation நடந்தது.
பாம்பின் கால் பாம்பறியும் என்று ஏதோ சொல்வார்களே. அதை மெய்ப்பிக்கும் விதமாக பாம்பாக இருந்த மதன்.. இப்போது ஏதோ ஒரு மேலிடத்தின் உத்தரவு அல்லது அனுசரணையுடன், படம் எடுத்திருக்கிறார்.
இந்த so called Sting operationல மதனுக்கு துணையா இருந்தது, கிட்ட தட்ட coordinatorஆ செயல்பட்டது கிஷோர் கே சுவாமியாக தான் இருக்கும்.
இதில் பலத்த அடி விழுந்தது மாதேஷ் மற்றும் அய்யப்பன் என்ற இரு வாயாரிகளுக்கு(வாயை விற்று பிழைப்பவர்கள்)தான்.
மற்றவர்கள் அடி வாங்கினாலும், so what.. எங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா என்ற rangeல தான் பேசிட்டிருக்காங்க. அதிலும் Mr. ராஜவேல், அவருடைய ரெண்டு தலையாட்டி பொம்மைகள் கிட்டயும். இதை ஒரு பெரும் சாதனை போல தான் பேசிட்டிருக்கார். ராஜவேல் மூஞ்சில நித்தியானந்தா தேஜஸ் அடிக்குது. அப்பறம் அந்த உமாமகேஷ்வரன், the திராவிடம் 2.0 intellectual ஐ பற்றி என்ன சொல்ல...😂😂
தங்களை விட்டால் திமுகவுக்காக சிந்திக்க ஆளே இல்லை என்றும், ஏதோ தங்கள் தயவு தாட்சணியில் தான் திமுகவே இன்னும் இயங்குகிறது போன்ற எண்ணங்களில் மிதுந்து, கண்டபடி கருத்துக்குளை சிதற விட்டு திரியும் குட்டி சுட்டி திராவிட சு. சுவாமிகள் and பிரஷாந்த் கிஷோர்கள் தான் இந்த திராவிட 2.0 கும்பல். அந்த கும்பலின்
கொலைகாரர் புருனோ,
ஸ்டாம்ப் சித்தர் டான்(உண்மையான டான் இல்லை) அசோக்,
அஞ்சு பத்து அப்துலா வரிசையில் இணைந்தார் உமாமகேஷ்வரன்.
நீங்கள் நல்ல rate தந்தா யாருக்கும் கூவுவேன் என்பதை தான் தங்கள் முதன்மை கொள்கையாக திராவிடம் 2.0 கும்பல் வகுத்துள்ளது என்பதை உமாமகேஷ்வரன் உறுதி செய்துள்ளார்.
இவர்கள் இப்படி exposeஆனது எனக்கு வியப்பாக இல்லை. ஆனால் இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில செய்திகள் உள்ளது.
முதலில் இந்த so called sting operation இல் இவர்களை உள்ளுக்குள் கொண்டு வர ஒரு முகவர் வேலை செய்திருக்கிறார். அந்த முகவர் யார் என்பதை இவர்கள் யாருமே பெருசா வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. ஒருவர் இன்னொருவரை கோர்த்து கோர்த்து பின்னப்பட்ட வலை தான் இது.
வெவ்வேறு கருத்துநிலையில் பயணிக்கும் இந்த so called ஊடகவியலாளர்கள் எல்லோருமே தங்களை பொதுவில் நடுநிலை ஊடகங்களாக காட்டிக்கொள்ளும் கூட்டம் தான்.
இவர்கள் நடுநிலைமை காப்பது, பக்கச்சார்பற்று செய்திகளை வெளியிட அல்ல. எந்த நேரமும் எந்த கட்சியுடனும் ஒப்பந்தம் போட தான் என்பது இதனூடாக தெளிவாகிறது.
ஊடகத்தில் நடுநிலைமை என்பது ஒரு ஏமாற்று வேலை! அதிலும் ஊடகங்கள் பெரும்பாலான நேரம் செய்திகளை சொல்வதை தாண்டி, செய்திகளை விவாதிக்கும், திணிக்கும் இந்த காலத்தில் நடுநிலைமை எல்லாம் சாத்தியமே இல்லை.
இங்கே நடுநிலைமை என்பது தேர்தலுக்கு தேர்தல் ஊடகங்கள் தங்கள் நிகழ்ச்சி நிரல்களையும், தேவைப்பட்டால் நிறங்களையும் மாற்ற பயன்படுத்தும் ஒரு முகமூடி, அவ்வளவு தான்.
இந்த முகமூடியை அணிந்து கொண்டு இவர்கள் ஒரு கட்சியை ஆதரிக்கும் அல்லது விளம்பரப்படுத்தும் பணியை செய்தாலும் சிக்கல் இல்லை. ஆனால் இவர்களோ கட்சிகளின் அடியாட்கள் போல் அல்லவா செயல்படுகிறார்கள்.
இந்த sting operation இல் சிக்கிய எல்லோரும்
பணம் கொடுத்தால்,
சாராயம் கொடுத்தால்,
Ipad கொடுத்தால்,
யார் மீது வேண்டும் என்றாலும் அவதூறும் பொய் செய்திகளும் பரப்ப தயாராக இருக்கிறார்கள்!
இது வியாபாரம் அல்ல! வியாபாரத்துக்கும் ஒரு அறம் ஒரு இருக்கு தானே.
இவர்கள் அதையும் கடைப்பிடிக்கவில்லை.
பாலியல் தொழில் செய்பவர்கள் கூட 'தொழில் தர்மத்தோடு' தான் செயல்படுகிறார்கள்.
அதனால் இவர்களை அவர்களோடும் ஒப்பிட முடியாது.
ஒரு ரவுடி கூட ஏதோ ஓரளவு உடல் உழைப்பை போடுகிறான். அதனால் அவனோடு கூட இவர்களை ஒப்பிட முடியாது.
இவர்களை யாரோடு தான் ஒப்பிடலாம். இவர்கள், இவர்கள் வேலை செய்யும் அந்த அரசியல்வாதிகளை போன்றவர்கள் என்று தான் ஒப்பிட வேண்டி இருக்கு. ஏன் என்றால் இவர்களை மிஞ்சிய கேவலம் அவர்கள் தான்.
உண்மையிலேயே இந்த காலத்தில்
"நான் இந்த கட்சியில் இருக்கிறேன். நான் இந்த தத்துவத்தின் வழி பயணிக்கிறேன்" என்று வெளிப்படைத்தன்மையோடு நடக்கும் ஊடகங்கள் தான் ஓரளவுக்கு நம்பத்தகுந்த ஊடகங்களாக இருக்கின்றன. அவர்களிடம் ஒரு நேர்மை இருக்கு. ஆனால் இந்த நடுநிலைவாதிகள். No comments. Simply waste.
நேற்று மாதேஷ் கண்ணீர் சிந்திய காணொளிய நீங்க பார்த்திருப்பீங்க. தமிழர்கள் இரக்க மனம் படைத்தவர்கள்.
அதனால் மாதேஷ் போன்ற கழிசடைகள் மீதான எம்மவர்களின் கோபம் குறைந்திருக்கலாம். நீங்கள் மாதேஷ மன்னிக்க விரும்பினால் மன்னிக்கலாம்.. ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். இனியும் இவர்களை போன்றவர்களை நடுநிலைவாதிகள் என்று மட்டும் அடையாளப்படுத்தி விடாதீர்கள். அப்படி அடையாளப்படுத்துவது என்றால் இனிமேல் நாங்கள் நடுநிலைமை என்ற சொல்லை ஒரு இழி சொல்லாகவே பார்க்க பழகுகிறோம்.
நன்றி
Mr.பழுவேட்டரையர்
23/03/2023
Comments
Post a Comment