ஈழத்தில் சாதியத்தின் நிலை, தீண்டாமையின் நிலை எப்படி இருக்கிறது. போருக்கு முன் சூழல் எப்படி, போருக்கு பின் சூழல் எப்படி என்றெல்லாம் நிறைய விவாதங்கள் நடப்பதை காண கூடியதாக இருக்கிறது. இங்கே எல்லா விவாதங்களும் அவற்றை தொடுப்பவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்து நிலை சார்ந்த பற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறதே தவிர, இதில் எங்கும் வரலாறு சரியான முறையில் பதியப்படுவதும் இல்லை, பேசப்படுவதும் இல்லை. ஈழத்தில் உள்ள சாதிய கட்டமைப்புகள், மலையகத்தில் ஒரு வடிவத்திலும், தமிழீழத்தில் இன்னொரு வடிவத்திலும், சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு வடிவத்திலும் இருக்கிறது. இந்த மூன்று மக்கள் கூட்டம் மத்தியிலும் உள்ள சாதி கட்டமைப்புகள் கூட ஒரே வடிவத்தில் இல்லை. சாதிய படிநிலைகளில் வித்தியாசம் உண்டு, சாதிய அடையாளங்களில் வித்தியாசங்கள் உண்டு, இவ்வாறாக நிலத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள் மாறுகின்றன. ஊருக்கு ஊர் கூட சில நேரங்களில் கட்டமைப்புகள் மாறுகிறது. வழக்கமா ஈழத்தில் உள்ள சாதியம் பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் சாதியம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக...
The official website of @mrpaluvets from twitter