26 October 2019.. - Bigil
பாட்டு, அதிரடி, நகைச்சுவை என எல்லாம் கலந்த total விஜய் package தான் Michael intro. வெறித்தனம் பாடல், மேலும் வெறியேற்றும்.
விஜயின் நடனத்திற்கு ஈடு கொடுக்க படத்தில் ஒரே ஒரு பாட்டு தான் இருக்குன்னு ஆரம்பத்தில் கவலைப்பட்டேன், ஆனால் வெறித்தனம் எனும் ஒரு பாட்டு, நாலு விஜயின் குத்து பாடல்கள் பார்த்த திருப்தியை தரும். பாடல்கள் தரம். 👍
Michael intro அதிரடி என்றால், ராயப்பன் intro காட்சி அதகளம்! முதல் காட்சியே வாத்தியார் பாடலுடன் ஒரு action வகுப்பு தான். விஜய இதுக்கு முன்ன இப்படி ஒரு introல பார்த்ததில்லை என்று கூட சொல்லலாம். ராயப்பன், கதை முழுவதும், கதையின் உயிர்நாடியாக வலம் வருகிறார்.
ராயப்பன் கதாபாத்திரம் விஜய்க்கு புதுசு. ஒரு matured mass hero எப்படி இருக்கணுமோ, அப்படியிருக்கிறார் ராயப்பன்.
3 மணித்தியாலத்தில் படத்தில் வரும் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை. எல்லாமே சரியாக பொருந்தும்..
சிறு சிறு நகைச்சுவை காட்சிகள், அந்த காவல் நிலைய காட்சி, விவேக், யோகிபாபு, church scenes, என்று எல்லாமே அழகா இருக்கு, கதையில் புது கதாபாத்திரங்கள், புது புது storylines இடையில் சேர்க்கப்படுவது, மக்களின் கவனத்தை சிதற விடாமல் தடுக்குது.
இன்னொரு கதை side trackஆ ஓடினாலும், அதுவும் படத்தின் ஓட்டத்தை திசை திருப்பாமல், திரைக்கதையின் வேகத்தையும், வலிமையையும் அதிகரிக்கவே உதவுகிறது.
எச்சையின் அட்மினுக்கும், அவனது ஹரி ஹர 'சர்மா' பெயருக்கும்(allegedly) படத்தில் தரமான செருப்படி இருக்கு. டெல்லி அதிகார திமிருக்கும் சவுக்கடி வசனங்கள் இருக்கு.
விஜய் தொடர்ந்து 'தமிழ் மாநிலம் வாழ்க' என முழங்கும் படங்களில் நடிப்பது, விஜயின் மீதுள்ள மரியாதையை அதிகரிக்கிறது.
இந்த படமும் சமூக நீதி பேசுது!
State, மாநிலம், ஊர் என்று விஜய் குறிப்பிடும் போது, அதற்கு homelandனு subtitles போட்டது சிறப்பு.
இது வெறும் sport film அல்ல. இது ஒரு பக்கா commercial film.ஆனாலும் Football sequencesக்கு முக்கியத்துவம் கொடுத்து நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். ஒரு வழக்கமான sport film மாதிரி drag பண்ணாம, எல்லாம் கலந்த ஒரு total packageஆ படம் விறுவிறுப்பா நகருது.
ரகுமானின் இசையும் தரம். அது சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. Simpleஆ சொல்லனும்னா, வழக்கமா சொல்லுறது தான். ஒரு MGR படம் பார்த்த மாதிரி இருக்கு.
#Bigil ❤️❤️❤️❤️❤️
🙏
Comments
Post a Comment