3000, 4000 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று சொல்லும் தந்தை பெரியாரின் கருத்து, அறிவியலுக்கு முரணான, Civilisation/நாகரிகத்தின் தோற்றம் பற்றிய புரிதலற்ற பிதற்றலாக தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்வது ஒரு வித திராவிட மூடநம்பிக்கை. அறிவியலின் அடிப்படையில், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்க போனால், காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதர்கள், பெரியாரின் மொழியில் சொல்லப்போனால் "காட்டுமிராண்டிகள்", ஒரு நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அங்கே கூடி குடியிருந்து , கட்டமைப்புகள் உருவாக்கி, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழி வளர்த்து, விவசாயம் செய்தி, கால்நடைகள் வளர்த்து, ஆவணப்படுத்தல், அறிவு கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் கூட்டமே நாகரிகமாக அடையாளப்படுகிறார்கள். இங்கே காட்டுமிராண்டியையும், நாகரிகத்தையும் வேறுப்படுத்தும் விடயங்களில் மொழி முக்கியமான இடத்தில் இருக்கிறது. எழுத்து, பேச்சு, இலக்கணம், என வளர்ச்சி அடைந்த மொழி - நாகரிகத்தின் அடையாளமாக, அடிநாதமாக
The official website of @mrpaluvets from twitter