கருணாநிதியின் சுயநலத்தால் வீழ்ந்த அவர் மூத்த மகன் மு.க.முத்துவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டத்துண்டா ?
ஆரம்ப காலம் தொட்டே கருணாநிதிக்கு மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்திருக்கிறது.
திமுகவின் வெற்றிகளுக்கு மக்கள் திலகத்தின் திரை பிரபலம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணாவை எளிய மக்களின் பார்வைக்கு எடுத்து சென்றது மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் என்று சொன்னால், அது மிகையாகாது.
கருணாநிதியால் மக்கள் திலகத்தின் அந்த புகழை எட்ட முடியவில்லை. மக்கள் திலகத்தின் ஆதரவோடு முதலவரான பின்னரும் கருணாநிதியால் மக்கள் திலகத்தின் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
மக்கள் திலகம் திரைப்படங்களில் நடிப்பதினால் தான் இந்த புகழை எட்டியிருக்கிறார், அதனால் அவருக்கு போட்டியாக ஒருவரை திரைத்துறையில் இறக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் கருணாநிதி.
அதற்கான சிறந்த வேட்பாளரை வேறெங்கும் தேடாமல், குடும்பத்துக்குள்ளேயே தேடி, தன் முதல் மகனான முக முத்துவை தனது அதிகாரத்தை பயன்படுத்தி திரையுலகில் களமிறக்கினார் கருணாநிதி.
கருணாநிதியின் ஆரம்ப கால ஆட்சியின் போது, கருணாநிதியின் ஆட்சி அதிகார தயவோடு, முத்து 7 படங்களில் நடித்தார்.
தனிப்பட்ட முறையில் MGRஇன் ரசிகராக இருந்த முத்து, தந்தையின் கட்டாயத்தின் பெயரில் நடிகரானார், நல்ல நடிகராக வலம் வர வேண்டியவரை, MGRஐ வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் நாசமாக்கியது திமுக.
கருணாநிதி முதலமைச்சரான முதல் termஇல் அமுல்படுத்திய முதல் project முத்து தான். MGRஐ எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக மற்ற முதலமைச்சர் கடமைகளை மறந்துவிட்டு தானே தனது மகனின் முதல் படத்தை எழுதி தயாரித்தார். அப்படியாக 7 படங்கள் வரிசையாக அவர் ஆட்சிக்காலத்தில் வந்தது.
ஆனால் MGRஐ வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? கருணாநிதியின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது, மு க முத்துவின் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கேலிக்குள்ளானது. கருணாநிதி எதிர்பார்த்த அளவுக்கு முத்துவால் திரையுலகில் சாதிக்க முடியவில்லை. வன்மத்தை மட்டும் வைத்து கொண்டு தந்தை மகன் கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.
சிறு வயதில் தாயை இழந்த முத்துவுக்கு தந்தையின் பாசமும் பெரிதாக கிடைக்கவில்லை. எல்லா வெளிச்சமும் ஒரே நேரத்தில் தந்தை முதலமைச்சரானவுடன் கிடைத்தது. இந்த திடீர் மாற்றங்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. திரையுலகிலும் தாக்கு பிடிக்க முடியவில்லை, இறுதியில் அவர் போதைக்கு அடிமையானார்.
தனது திட்டத்துக்கு முத்து சரிப்பட்டு வரமாட்டார் என்று தெரிந்தவுடன் கலைஞர், தன் சொந்த மகனையே புறக்கணிக்க ஆரம்பித்தார்.. தந்தைக்கும் மகனுக்கும் விரிசல் ஏற்பட்டது, மக்கள் திலகத்தை அழிக்க புறப்பட்ட கூட்டணி, தனக்குள் முரண்பட்டு நின்றது.
தந்தை, மற்றும் கட்சியால் ஓரங்கட்டபட்ட முத்து இறுதியாக மக்கள் திலகத்தின் நட்பை பெற முயற்சித்தார், கருணாநிதியின் சொந்த மகனே கடைசியில் MGRஐ தான் நம்பினார். இப்படி எல்லா சதிகளையும் முறியடித்து தான் மக்கள் திலகம் முடி சூடினார்.
எம் ஜி ஆறும் அவரை பல முறை பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றி உதவியிருக்கிறார். கருணாநிதியின் மகன் என்று தெரிந்தும், தன்னை அழிக்க களமிறக்கப்பட்டவன் என்று அறிந்தும், மு.க.முத்துவுக்கு உதவினார் மக்கள் திலகம். அங்க நிற்கிறார் அந்த மனுஷன்.!
பொறாமையும் வயித்தெரிச்சலும் இருக்கலாம், ஆனா சொந்த மகனையே பயன்படுத்தி வன்மம் தீர்க்க முயற்சிப்பது எல்லாம், மிகவும் கேவலமான அரசியல். தன் சுயலாபத்துக்காக தன் மகனின் வாழ்க்கையை கெடுத்தார் கருணாநிதி என்ற பழி மட்டும் தான் அவருக்கு மிஞ்சியது.
-Mr.பழுவேட்டரையர்
Comments
Post a Comment