3000, 4000 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று சொல்லும் தந்தை பெரியாரின் கருத்து, அறிவியலுக்கு முரணான, Civilisation/நாகரிகத்தின் தோற்றம் பற்றிய புரிதலற்ற பிதற்றலாக தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்வது ஒரு வித திராவிட மூடநம்பிக்கை.
அறிவியலின் அடிப்படையில்,
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்க போனால்,
காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதர்கள், பெரியாரின் மொழியில் சொல்லப்போனால் "காட்டுமிராண்டிகள்",
ஒரு நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அங்கே கூடி குடியிருந்து , கட்டமைப்புகள் உருவாக்கி, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழி வளர்த்து, விவசாயம் செய்தி, கால்நடைகள் வளர்த்து, ஆவணப்படுத்தல், அறிவு கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் கூட்டமே நாகரிகமாக அடையாளப்படுகிறார்கள்.
இங்கே காட்டுமிராண்டியையும், நாகரிகத்தையும் வேறுப்படுத்தும் விடயங்களில் மொழி முக்கியமான இடத்தில் இருக்கிறது.
எழுத்து, பேச்சு, இலக்கணம், என வளர்ச்சி அடைந்த மொழி - நாகரிகத்தின் அடையாளமாக, அடிநாதமாக இருக்கிறது.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதர்கள், தமிழோடு சேர்ந்து பரிணாமித்து நாகரிகத்தின் மனிதர்களாக, தமிழர்களாக அடையாளப்படுகிறார்கள்.
இங்கே காட்டுமிராண்டியை நாகரிக மனிதனாக மாற்றியது தமிழ் என்று கூட சொல்லலாம்.
அதனால் தமிழ்! நாகரிக மனிதனின் மொழியாக இருக்கிறது. !
நாகரிகத்தை உருவாக்கிய மொழியாக இருக்கிறது! ஆகையினால் தமிழ்,
தொன்மை மிக்க நாகரிகத்தின் முதன்மை அடையாளமாக இருக்கிறது!
அதை காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொல்வது, மொழியின் பரிணாம வளர்ச்சியை பற்றிய, நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய புரிதலற்ற பேச்சாகவே பார்க்க வேண்டியதாக இருக்கு.
அறிவியலுக்கு முரணனான நிறைய கருத்துக்களை பெரியார் பல இடங்களில் சொல்லிவிட்டு செல்கிறார். அதில் ஒன்று தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற அவரது கருத்தும்.
அந்த கருத்தை இன்று வரை ஆழமாக நம்பி பரப்பும் திராவிடர்கள், மூடர்களாகவும், மூட நம்பிக்கை கொண்டவர்களாகவும் தான் தென்படுகிறார்கள்.
-Mr. பழுவேட்டரையர்
Comments
Post a Comment