Skip to main content

Posts

Showing posts from July, 2023

பௌத்தத்தின் -சிங்கள ஆதிக்க சாதிய கொடி

இன்று நிறைய தமிழ் பௌத்தர்கள், குறிப்பாக தலித்திய கருத்தியலை முன்னிறுத்தும் பௌத்தர்கள் மத்தியில், இந்த பௌத்த கொடியை காண கூடியதாக இருக்கிறது.  இந்த கொடியின் வரலாறு, இங்கே பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ சில பௌத்த துறவிகள் உருவாக்கிய கொடி என்று மட்டுமே தான் எல்லோருக்கும் மேலோட்டமா தெரிஞ்சிருக்கும். ஆனால் இந்த கொடியை உருவாக்கிய பௌத்த துறவிகளின் வரலாறு இங்கே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.  இன்று உலகெங்கும் பரவி வாழும் பெரும்பாண்மையான பௌத்தர்கள் இந்த கொடியை பயன்படுத்தினாலும், இந்த கொடி சிங்கள பௌத்தர்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கொடியாகவே இருக்கிறது. அதிலும் இந்த கொடியை உருவாக்கிய துறவிகள் சாதியத்தை தூக்கி பிடித்தவர்களாகவும், தங்களை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.  இதை பற்றி எல்லாம் கொஞ்சம் அலசி பார்ப்போம். இலங்கையில் உள்ள பௌத்தம், சிங்கள இனவாதத்தோட, இனத்தூய்மைவாதத்தோடு பிண்ணி பிணைந்திருக்கிறது.  பௌத்தம் என்பது இலங்கையில் ஆதிக்கத்தின் குறியீடாக, சிங்கள மேலாதிக்க தர்மமாகவே திகழ்கிறது. சிங்கள அரசு, இலங்க...