இன்று நிறைய தமிழ் பௌத்தர்கள், குறிப்பாக தலித்திய கருத்தியலை முன்னிறுத்தும் பௌத்தர்கள் மத்தியில், இந்த பௌத்த கொடியை காண கூடியதாக இருக்கிறது.
இந்த கொடியின் வரலாறு, இங்கே பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ சில பௌத்த துறவிகள் உருவாக்கிய கொடி என்று மட்டுமே தான் எல்லோருக்கும் மேலோட்டமா தெரிஞ்சிருக்கும். ஆனால் இந்த கொடியை உருவாக்கிய பௌத்த துறவிகளின் வரலாறு இங்கே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
இன்று உலகெங்கும் பரவி வாழும் பெரும்பாண்மையான பௌத்தர்கள் இந்த கொடியை பயன்படுத்தினாலும், இந்த கொடி சிங்கள பௌத்தர்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கொடியாகவே இருக்கிறது. அதிலும் இந்த கொடியை உருவாக்கிய துறவிகள் சாதியத்தை தூக்கி பிடித்தவர்களாகவும், தங்களை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதை பற்றி எல்லாம் கொஞ்சம் அலசி பார்ப்போம்.
இலங்கையில் உள்ள பௌத்தம், சிங்கள இனவாதத்தோட, இனத்தூய்மைவாதத்தோடு பிண்ணி பிணைந்திருக்கிறது.
பௌத்தம் என்பது இலங்கையில் ஆதிக்கத்தின் குறியீடாக, சிங்கள மேலாதிக்க தர்மமாகவே திகழ்கிறது.
சிங்கள அரசு, இலங்கையை அடக்கி ஆளும் அதிகாரத்தை, சிங்கள பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட இதிகாச கதைகளின் ஊடாகவே பெறுகிறார்கள். இலங்கை மீது சிங்கள தேசம் உரிமை கோருவது, பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட மகாவம்சமெனும் நூலின் ஊடாக தான்.
சிங்கள அரசுகளின், சிங்கள பௌத்த துறவிகளின் வரலாறை நீங்கள் எடுத்து பார்த்தால், அதில் பௌத்த துறவிகள் பார்ப்பனியத்தன்மையோடும், சிங்கள அரசர்கள் சத்திரிய தன்மையோடும் நடந்து கொள்வதை நீங்கள் அவதானிக்கலாம். இதை நியாயப்படுத்தும் விதமான நூல்களையும் பல சிங்கள பௌத்த துறவிகள் இயற்றியும் இருக்கிறார்கள்.
உலகில் ஆரிய பார்ப்பனியத்தின் கோர வடிவமாக இருப்பது, இலங்கையில் இருக்கும் சிங்கள பௌத்த துறவிகள் தான்!
சிங்களவர்கள் தங்களை வெளிப்படையாக ஆரியர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த கொடியை வடிவமைத்த ஹிக்கடுவ சுமங்கல தேர என்ற பௌத்த துறவி, ஆரிய தர்மம், பிராமண தர்மம் பற்றிய பிரச்சாரங்களை முன்னெடுத்த ஒரு சிங்கள ஆதிக்க சாதியவாதி. மகாவம்சத்தின் தமிழின வெறுப்பு பிரச்சாரத்தை சிங்கள மொழியில் இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தது இந்த பௌத்த துறவி தான்.
சுமங்கல தேரவின் முதன்மை மாணவனாக செயல்பட்ட அநாகரிக தர்மபால தான் "சிங்களவர்கள் தூய ஆரிய இனம்!" என்று சொல்லி சிங்களவர்களின் பெயர்களுக்கு முன்னாள் ஆரியத்தை சேர்க்கும் வேலையை ஆரம்பித்துவிட்டான். ஆரியபால, ஆரியதிலக போன்ற பெயர்களோடு சிங்களவர்கள் திரிய காரணம் இவர் தான்.
"ஆரிய சிங்களவர்கள் உயர்ந்தவர்கள்,அவர்கள் தமிழர்கள்,முஸ்லிம்கள் போல் ஆடை அணிய கூடாது.வெள்ளை ஆடைகள் தான் அணிய வேண்டும்.ஆரியர்கள் தான் தூய மனிதர்கள்" போன்ற கருத்துக்களை பரப்பியவர் தான் இவர்
இலங்கையின் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி என்பது ஆரிய அடையாளத்தை தனதாக்கிக்கொள்ள சிங்களம் எடுத்த ஒரு நடவடிக்கை என்று தான் சொல்ல வேண்டும். அநாகரிக தரம்பாலவின்(சிங்கள தேசியத்தின் தந்தை) "சிங்கள தேசம் ஆரியர்களுக்கு சொந்தமான தேசம்" என்ற முழக்கம் தான் சிங்கள தேசியத்தின் முதல் முழக்கம்!
இந்துத்துவத்தின் தந்தையாக கருதப்படும் கோல்வாக்கரின் சிந்தனைகளுக்கும் சிங்கள தேசியத்தின் தந்தையான அநாகரிக தர்மபாலவின் கருத்துக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஆரிய சாதிய மேலாதிக்க சிங்கள பௌத்த துறவிகளால் உருவாக்கப்பட்ட மதவாத கொடி தான் இன்று உலக பௌத்தர்களின் கொடியாக இருக்கிறது. அந்த கொடியை வடிவமைத்தவர்களின் கொடிய சிந்தனை எப்படி இருக்கு பார்த்தீங்களா 👇
தொடரும்...
Mr. பழுவேட்டரையர்
30/07/2023
Comments
Post a Comment