சமீபத்தில் அண்ணன் சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. உடன்பிறப்புகளின் உலகத்தில் ஒவ்வொரு கிழமையும் இது தான் செய்தி. 30 secondsக்குள் எதையாவது வெட்டி ஒட்டி சரி ஒரு கிழமைக்கான தீவனத்தை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் அறிவாலயத்துக்கு வெளியே ஒதுங்கும் திமுகவின் ஊடகமுட்டாளர்களுக்கு தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கினால் தான் வயிறு நிரம்பும். அப்படிப்பட்டவர்கள் உருவாக்கிய புது சர்ச்சை தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்ணன் சீமான் பேசிவிட்டார் என்ற இந்த புது புகார். அண்ணன் சீமானின் பேச்சானது, தொடர்ந்து பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக எனும் கூட்டத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீதான ஆதங்கம் தான். அந்த பேச்சின் தொடக்கத்தில், குஜராத் படுகொலையை, மோடி எனும் இந்துத்துவ பயங்கரவாதி நிகழ்த்திய போது, அதை கண்டிக்காது வேடிக்கை பார்த்து, பாஜகவை பல இடங்களில் காப்பாற்றும் வேலையையும் செய்த திமுக மீதான விமர்சனம் மற்றும் அதன் துரோக வரலாற்றின் அம்பலப்படுத்தலோடும் தான் ஆரம்பிக்கிறது. ஆதாரம்: குஜராத் படுகொலை பற்றிய அண்ணன் சீமானின் பேச்சின் இணை...
The official website of @mrpaluvets from twitter