விடுதலை புலிகள் இயக்கம், ஈழ விடுதலை போராட்டம் என்று வரும் போது, பெரும்பாலானோருக்கு போறும், சண்டைகளும், மண்டியிடாத தமிழினத்தின் வீரம் செரிந்த வரலாறும் தான் முதலில் நினைவுக்கு வரும். அது போல, அதே அளவுக்கு இயக்கத்தின் அரசியலும் இங்கே அதிக அளவில் பேசப்பட வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் வெறுமனே தமிழினத்துக்கான ஒரு தேசிய இராணுவத்தை மட்டும் கட்டவில்லை, அவர்கள் ஒரு தேசத்தையும், அந்த தேசத்துக்கான சுதந்திர நாட்டையும் கட்டியெழுப்பியவர்கள். உங்களுக்கு அவர்களை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சாதி மதம் பிரதேசமென பிளவுப்பட்டிருந்த ஒரு இனத்துக்குள் இப்படிப்பட்ட ஒரு புரட்சியை உருவாக்கிய விடுதலை புலிகள் இயக்கம், உலகெங்கும் தமிழினத்தின் இன மற்றும் சமூக விடுதலைக்கான அடிப்படைகளை மிகவும் ஆழமாக வேரூன்ற நிறுத்தி விட்டு தான் சென்றிருக்கிறார்கள். அந்த அடிப்படைகளில் ஒன்று ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு. ஈழ அரசியல் வரலாற்றில் ஆரிய பார்ப்பனியத்தை வெளிப்படையாகவும் நேரடியாகவும் எதிர்த்த ஒரே இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் மட்டும் தான். தேசியத் தலைவர் தனத
The official website of @mrpaluvets from twitter