காலா படத்தின் முதல் காட்சியிலேயே ரஜினி clean bowled ஆகுறாரு. காலா முதல் sceneலயே score பண்ணுறாரு. ரஜினி என்ற பிம்பத்தை, brand powerஐ ரஞ்சித் அந்த காட்சியில் உடைக்கவில்லை, அதை ஒரு மக்கள் கூட்டத்திடம் பகிர்ந்தளிக்கிறார்
அதன் பின் வரும் காலாவின் 'mass' எல்லாமே அந்த மக்கள் கூட்டத்தின் ஊடாகவே வெளிப்படுகிறது. முதல் காட்சியில் heroism உடைக்கப்படவில்லை, பகிரப்படுகிறது. இதுவரை காலமும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் வழி அறிமுகமான ரஜினி, காலாவில் சமத்துவ தன்மையை அடைகிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் ராமன் தன் பேத்தியிடம் ஆதிக்கத்தை போதிக்கிறான். காலாவின் கால தொட்டு கும்பிட சொல்கிறான். ஆதிக்க கட்டமைப்பை ராமனும் பின்பற்றுகிறான் என்பதை உணர்த்தவே அந்த காட்சி.அந்த பொண்ணு, காலாவை கொன்று விடாதீர்கள் என்று சொல்கிறாள்! ஆதிக்கத்தின் திமிர்/பிச்சை, பெருந்தன்மையல்ல
காலா சிறுவர்களுடன் நடந்துகொள்ளும் முறை ராமனுக்கு நேர் எதிர். காலாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருப்பது அன்பின் அடிப்படையில் உருவான உறவு. ஆதிக்கம் அங்கு உறவாடவில்லை.
ராமனின் சூழல், வெள்ளையா, சுத்தமா, அமைதியா இருக்கும்! அது தனிமையல்ல, வெறுமை, மனிதர்கள்,மனிதத்தின் வெறுமை. அவனை சுற்றி இருப்பது அதிகார சின்னங்கள் (வாள்/ல்,கொடி, கிருஷ்ணன் etc) மட்டும் தான். ராமாயணத்தில் ராமன் கூட சீதையுடன் வாழ்ந்த காலத்தை விட ராஜ்ஜியதுடன் வாழ்ந்த காலம் தானே அதிகம்?
ஆனால் காலாவை சுற்றி அதிகாரம் இருக்காது, உறவுகள் இருக்கும், மக்கள் இருப்பார்கள், வெறுமை இருக்காது வேற்றுமை இருக்கும், வேற்றுமையில் ஒற்றுமை இருக்கும், குடும்பம்,சண்டை சச்சரவு என்று ஒரு சமூக கட்டமைப்பு இருக்கும். காலாவை சுற்றி பத்து தலைகள் எப்பவுமே இருக்கும்.
ராமன் ரொம்ப எளிமையான மனிதர், காந்தி போன்றவர், செருப்பு போட்டுக்கிட்டு, சாதாரண வெள்ளை உடையுடன் வருவார். Money doesn't motivate him,Dharma motivates him. காலாவை எதிர்ப்பதை மக்களின் நலனுக்காக என்று கருதி செய்கிறார். அதிகாரம், ஆதிக்கத்துக்கு simplicity தானே ஆடம்பரம்?
காலாவோ சாதாரண மனிதர், ஆடம்பரம் உண்டு! Mass, Style,கெத்து எல்லாமே உண்டு. Coat suit போடுவார், பாடுவார், ஆடுவார், எல்லாரையும் போல் இருப்பார், 10 கலைகள் அறிந்த தலை போல் செயல்படுவார்,ஆனால் அவரை motivate செய்வது அறம். இது தர்மத்துக்கும் அறத்துக்கும் இடையிலான போர்.
ராமன் யாருங்க? அவர் ஒரு சாதி மதமற்ற ஒரு ஆன்மிக அரசியல்வாதி, மய்யத்தில் இருந்து பேசுகிறார். மனு constructions/தர்மப்படி, உன் வாழ்வியலை மாற்றிக்கொள் என்று சொல்கிறார். நீ சுத்தமற்றவன் என் புனிதத்தை ஏற்றுக்கொள் என்கிறார்,golf விளையாடு sanskritisationஅ ஏற்றுக்கொள் என்கிறார்.
காலா என்ன சொல்கிறார்? என் வாழ்வியலை உன் புனிதம் தான் அசுத்தப்படுத்துகிறது, என் பிறப்பே உனக்கு அசுத்தமாக தான் தெரியும். உனக்கு என் உழைப்பு, வாக்கு, நிலம் தேவைப்படுது, அதனால் Sanskritisation"development"அ தூக்கிட்டு வருற, எனக்கு உன் புனிதம் வேண்டாம் என்கிறார்.
ராமன் அதிகாரம் படைத்த அரசியல்வாதி, அவனை சுற்றி சீருடையுடன் ஆண்கள் இருப்பார்கள்,அவன் எங்கு திரும்பினாலும் ஆண்கள். அவன் அதிகாரத்தில், தர்மத்தில் பெண்களுக்கு இடம் இல்லை, ராம ராஜ்ஜியத்தில் சீதையே காட்டில் தானே இருந்தால்?
காலாவை சுற்றி எங்கும் பெண்மையின் பன்முகத்தன்மை, சமூகத்தின் பன்முகத்தன்மை ஊடாக வெளிப்பட்டது.படத்தில் அதிகாரத்துக்கு எதிராக வரும் முதல் குரல் பெண்ணுடையது! கற்பெனும் கற்பிதத்தை காக்கும் ஆடையை அதிகாரம் அவிழ்த்த போது கூட, உரிமையை விட்டுக்கொடுக்காது போராடிய பெண்ணியம்
30/06/2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் நான் எழுதியதின் மீள் பதிவு
-Mr. பழுவேட்டரையர்
Comments
Post a Comment