விடுதலை புலிகள் இயக்கம், ஈழ விடுதலை போராட்டம் என்று வரும் போது, பெரும்பாலானோருக்கு போறும், சண்டைகளும், மண்டியிடாத தமிழினத்தின் வீரம் செரிந்த வரலாறும் தான் முதலில் நினைவுக்கு வரும்.
அது போல,
அதே அளவுக்கு இயக்கத்தின் அரசியலும் இங்கே அதிக அளவில் பேசப்பட வேண்டும்.
விடுதலை புலிகள் இயக்கம் வெறுமனே தமிழினத்துக்கான ஒரு தேசிய இராணுவத்தை மட்டும் கட்டவில்லை, அவர்கள் ஒரு தேசத்தையும், அந்த தேசத்துக்கான சுதந்திர நாட்டையும் கட்டியெழுப்பியவர்கள். உங்களுக்கு அவர்களை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
சாதி மதம் பிரதேசமென பிளவுப்பட்டிருந்த ஒரு இனத்துக்குள் இப்படிப்பட்ட ஒரு புரட்சியை உருவாக்கிய விடுதலை புலிகள் இயக்கம், உலகெங்கும் தமிழினத்தின் இன மற்றும் சமூக விடுதலைக்கான அடிப்படைகளை மிகவும் ஆழமாக வேரூன்ற நிறுத்தி விட்டு தான் சென்றிருக்கிறார்கள்.
அந்த அடிப்படைகளில் ஒன்று ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு.
ஈழ அரசியல் வரலாற்றில் ஆரிய பார்ப்பனியத்தை வெளிப்படையாகவும் நேரடியாகவும் எதிர்த்த ஒரே இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் மட்டும் தான்.
தேசியத் தலைவர் தனது முதலாவது மாவீரர் நாள் உரையில் இந்தியாவுடனான போரை பற்றி பேசும் போது, இந்திய அரசை 'ஆரியர்களாகவே' அடையாளப்படுத்தி பேசியிருந்தார். அந்த காணொளியை இந்த இணைப்பில் நீங்கள் பார்க்கலாம்
எங்களின் வரலாறு முழுவதும் நடந்து வரும் ஆரியத்துக்கு எதிரான போரை பற்றி குறிப்பிடும் தலைவர், ஆரியம் ஒரு போதும் எங்களுக்கு உதவாது என்ற கருத்தை திடமாக முன்வைக்கிறார்.
இந்திய அரசு தொடர்பான தலைவரின் பார்வை எப்படி இருந்தது என்பதை தலைவரின் இந்த பேச்சில் இருந்தே நீங்கள் காணலாம்.
இப்படி வெளிப்படையாக ஹிந்தியத்தின் ஆரிய முகத்தை அடையாளப்படுத்தி வேறு எந்த ஒரு அரசியல்வாதியோ, இயக்க தலைவரோ ஈழ வரலாற்றில் பேசியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மட்டும் அல்ல. இந்திய அதிகார வர்க்கத்தின் ஆரிய பார்ப்பனிய பண்பையும் அதன் அரசியலையும் வெளிப்படையாக எதிர்க்க விடுதலை புலிகள் இயக்கம் தயங்கியதில்லை.
ஸ்ரீ சபாரத்தினத்தின் டெலோ, மற்றும் பத்மநாபாவின் EPRLF போன்ற அமைப்புகள் தங்கள் தனிப்பட்ட சுயலாபத்தை கணக்கிட்டு இந்தியாவின் ஏவல் நாய்களாகவும், ஆரிய பார்ப்பணியத்தின் அடிமைகளாகவும் செயல்பட்டுககொண்டிருந்த காலத்தில்,
தமிழின விடுதலைக்கும், சுய நிர்ணய உரிமைக்கும் எதிராக எவன், ஏன் அந்த இந்தியாவே படை கொண்டு வந்தாலும் அதையும் எதிர்க்க சற்றும் தயங்க மாட்டோம் என்று இறுதி மூச்சு வரை களமாடி, இந்திய ராணுவத்தை வீழ்த்தி, வெளியேற வைத்த விடுதலை புலிகள் இயக்கம் தனித்துவமானவர்களாகவே கடைசி வரையும் இருந்தார்கள்.
இங்கே கால காலமாக ஆரியத்தை வீழ்த்திய தமிழர்களின் மாவீரத்தின் தொடர்ச்சியாகவே விடுதலை புலிகளும் இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
வெறுமனே போர் களத்தில் மட்டும் அல்ல, அரசியல் களத்திலும் ஆரிய பார்ப்பனியத்தை எதிர்க்க விடுதலை புலிகள் இயக்கம் தயங்கியதில்லை.
இன்று diplomacy என்ற பெயரில் இந்துத்துவத்துக்கு விலை போகும் so called தமிழ் pseudo intellectual வெங்காயங்கள் பேசும் அரசியல் எல்லாம் தமிழர்களின் அரசியல் இல்லை.
விடுதலை புலிகள் இயக்கம் தமிழர்களுக்கு கற்று தந்த அரசியலானது, தந்திரோபாயம், தொலைநோக்கு பார்வை கொண்டது. அதன் அடிப்படைகள் தெளிவாக இருந்தது. எதை சமரசம் செய்யலாம், எதை சமரசம் செய்ய கூடாது என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது.
ஈழ விடுதலை போராட்ட அரசியல்
▪️தமிழின விடுதலை
▪️சமூக விடுதலையை
உள்ளடக்கியது.
இதில் தமிழின விடுதலைக்குள் - தேசம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, தேசியம் சார்ந்த அரசியலும்
சமூக விடுதலைக்குள்- இனத்தை ஒருங்கிணைக்கும் -சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மற்றும் வர்க்க விடுதலை சார்ந்த அரசியலும் இடம்பெறுகிறது.
இந்த இரண்டு அரசியலும் ஒருங்கிணைந்து பயணப்படும் பாதையே விடுதலையை நோக்கிய பாதையாக விடுதலை புலிகள் இயக்கம் கட்டமைத்திருந்தார்கள்.
எங்கள் இன விடுதலை அரசியலை ஆரிய பார்ப்பனியம் Indo Lanka ஒப்பந்தம், 13A போன்ற கருவிகள் ஊடாக எதிர்க்கிறது.
எங்கள் சமூக விடுதலை அரசியலை, ஆரிய பார்ப்பனியம்- இந்துத்துவம், சாதியம், போன்ற கருவிகள் கொண்டு எதிர்க்கிறது.
இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்களாகிய நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஆரிய பார்ப்பனியத்தின் இந்த கருவிகளை இவ்விரு தளங்களிலும் நாம் எதிர்க்க தயங்க கூடாது.
இந்த விடயத்தில் தலைவரின் தெளிவான சிந்தனை போக்கை, இயக்கத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவதானித்து வர கூடியதாக இருக்கு.
குறிப்பாக தேசியத் தலைவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலாசிங்கம் அண்ணனிடம் போராளிகளுக்கான அரசியல் வகுப்புகள் தொடர்பாக பேசும் போது,
"மேற்குலக சமுதாய வடிவத்தை பிரதிபலிக்கும் வர்க்க அமைப்புக்கும், இந்தியா இலங்கை போன்ற தெற்காசிய சமூகங்களின் சாதி அமைப்புக்கும் உள்ள வேறுபாடுகள் தெளிவுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டதை பற்றி அடேல் பாலாசிங்கம் அம்மையார் அவர்களின் நூலில் குறிப்பிட்டிருந்தார்.
ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு என்பது எங்கள் தேசிய இனத்தின் அறம் மற்றும் விழுமியங்களின் வெளிப்பாடு என்பதே தலைவரின் புரிதலாக இருந்தது.
அந்த புரிதல் எம்மவர்களுக்கும் இன்று நிறைய தேவைப்படுகிறது.
இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், எங்கள் போராட்டத்துக்கும் எதிராக நடந்த காய் நகர்த்தல்களில் முக்கிய பங்காற்றியது பார்ப்பனிய ஊடகங்கள் தான். அதிலும் சோ ராமசாமி, மற்றும் ஹிண்டு ராம் போன்றவர்கள் விடுதலை புலிகளுக்கு எதிராக மும்முரமாக எழுதி வந்தார்கள். அவர்களையும் அவர்களுடைய பார்ப்பனிய ஊடகங்களையும் விடுதலை புலிகள் இயக்கம் வெளிப்படையாகவே எதிர்த்தார்கள்.
புலிகளின் குரல் வழியாக இந்திய பார்ப்பனிய ஊடகங்களுக்கும், பார்ப்பனியத்துக்கும் எதிராக விடுதலை புலிகள் இயக்கம் வெளிப்படையாகவே பேசி வந்தது. அதில் யோகி அண்ணே வெளியிட்ட கருத்து பற்றிய அன்றைய ஒரு செய்தி குறிப்பை இங்கே பகிர்கிறேன் 👇
அது மட்டும் அல்லாமல், தேசியத் தலைவர் கூட பல இடங்களில் சமூக விடுதலை குறித்தான அவரது கருத்துக்களில் மனுதர்மம் சாஸ்திரங்களை எல்லாம் கிழிச்சு தொங்க போட்டிருக்கிறார்.
ஈழத்தில் பார்ப்பனர்கள் இல்லாவிட்டாலும், பார்ப்பனியம், இந்தியாவை கருவியாக்கி கொண்டு இன்று வரை தமிழினபடுகொலையை தொடர்வதில் குறியாக இருக்கிறது.
அதனால் தலைவர் சொன்னதை எப்போதுமே நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
அவர்கள் ஆரியர்கள். அவர்கள் எப்போதுமே எங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.
அதனால்,
மாட்டு மூத்திர வாடை அடிக்கும் வாய்கள் ஈழ அரசியல் பேச வந்தால், அவர்களை மூடிட்டு போக வைக்க வேண்டும். இல்லை விரட்டி அடிக்க வேண்டும்.
ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பில் இயக்கம் சமரசம் செய்ததில்லை.
தமிழர்கள் இனியும், ஒரு போதும் சமரசம் செய்ய போவதும் இல்லை.
-Mr. பழுவேட்டரையர்.
28/10/23
Comments
Post a Comment