வெள்ளத்தை,.. நீரின்றி உணவின்றி பாலின்றி உறக்கமின்றி தவித்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலையை, மூடி மறைக்க கடுமையாக போராடி வருகிறது திமுகவின் IT wing. வட சென்னை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்க, வெள்ளத்தால் பாதிக்கப்படாத ஒரு இடத்தில் இருந்த புணூல் அணிந்த ஐயரின் மீது வெளிச்சத்தை பாய்ச்சி, "எல்லாம் ஷேமமாக இருக்கு"ன்னு சொல்ல வெச்சு, அதுவே மக்களின் கருத்து என்று விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறது திராவிட ஊடகங்கள். இந்த கூட்டத்துக்கு மத்தியில், ஊடக அறத்தை கடைப்பிடித்து செயல்பட்டு வரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான NewsMinute ஊடகத்தை சேர்ந்த ஷபீர் அஹமத் தான் , கவனிப்பாரற்று கிடந்த வட சென்னை மக்களின் அவலத்தை ஊடகத்தில் முதல் முறையாக வெளிச்சம் போட்டு காட்டினார். அவரின் இந்த செயல், திமுகவினர் பக்கம் பக்கமாக எழுதி வந்த "சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது" கட்டுகதைகளை எல்லாம் பொய் என்று அம்பலப்படுத்தியது. இதனால் கடுப்பான திமுக IT wing.. "மக்களுக்கு இந்த நேரத்தில் பால் எல்லாம் அவசியமா? முழங்கால் வரை தானே தண்ணி நிற்குது, உங்களுக்கு எதுக்கு ப...
The official website of @mrpaluvets from twitter