வெள்ளத்தை,..
நீரின்றி
உணவின்றி
பாலின்றி
உறக்கமின்றி
தவித்து கொண்டிருக்கும்
மக்களின் அவல நிலையை, மூடி மறைக்க கடுமையாக போராடி வருகிறது திமுகவின் IT wing.
வட சென்னை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்க, வெள்ளத்தால் பாதிக்கப்படாத ஒரு இடத்தில் இருந்த புணூல் அணிந்த ஐயரின் மீது வெளிச்சத்தை பாய்ச்சி, "எல்லாம் ஷேமமாக இருக்கு"ன்னு சொல்ல வெச்சு, அதுவே மக்களின் கருத்து என்று விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறது திராவிட ஊடகங்கள்.
இந்த கூட்டத்துக்கு மத்தியில், ஊடக அறத்தை கடைப்பிடித்து செயல்பட்டு வரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான NewsMinute ஊடகத்தை சேர்ந்த ஷபீர் அஹமத் தான் , கவனிப்பாரற்று கிடந்த வட சென்னை மக்களின் அவலத்தை ஊடகத்தில் முதல் முறையாக வெளிச்சம் போட்டு காட்டினார்.
அவரின் இந்த செயல், திமுகவினர் பக்கம் பக்கமாக எழுதி வந்த "சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது" கட்டுகதைகளை எல்லாம் பொய் என்று அம்பலப்படுத்தியது.
இதனால் கடுப்பான திமுக IT wing..
"மக்களுக்கு இந்த நேரத்தில் பால் எல்லாம் அவசியமா?
முழங்கால் வரை தானே தண்ணி நிற்குது, உங்களுக்கு எதுக்கு படகு"
என்றெல்லாம் அதிகார திமிரில் உளறி கொட்டியதை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இது போதாது என்று இன்னும் ஒரு படி மேலே போய் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் ஊடகவியளாலர் ஷீபர் அஹமதுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். நேற்று Twitter/X தளத்தில் நடந்த ஒரு Space உரையாடலில் பேசிய போது சாய் லட்சுமிகாந்த்,
"ஷபீர் போன்ற ஊடகவியலாளர்களை எல்லாம் நிம்மதியாக வாழவே விட கூடாது என்று" மிரட்டுகிறார். அப்படி எல்லாம் மிரட்ட கூடாது என்று அவரது தோழர்கள் அவரை தடுக்க முற்பட்ட போது. இல்லை நான் அப்படி தான் மிரட்டுவேன். இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் இல்லை, விபச்சாரிகள் என்று சொல்கிறார்.
இப்படி எல்லாம் பேசுவது ஆர். எஸ். பாரதியின் மகனுக்கு ஒரு முழு நேர தொழிலாகவே மாறியிருக்கிறது. தகப்பனின் பெயரை சொல்லி அரசியலில் தண்ட சோறு தின்னும் nepo kidகளில் ஒருவர் தான் இந்த ஆர். எஸ். பாரதியின் மகன். ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அப்பன் சொகுசில் சுகம் காணும் இவர்களிடம் இருந்தெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது தான்..
திமுக ஆட்சியில் இப்படி ஊடகவியலாளர்களை வெளிப்படையாக மிரட்டும் அளவுக்கு தான் நீதி நிர்வாகம் இருக்கிறது போல.
அரசுக்கு எதிராக ஒரு மீம் போட்டாலே அவசர அவசரமா கைது செய்யுற திமுகவின் சட்ட ஒழுங்கு. இதை அமைதியா வேடிக்கை பார்ப்பது ஏன்? இல்லை தொடர்ந்து வேடிக்கை தான் பார்க்க போகிறீர்கள் என்றால் ஆர் எஸ் பாரதியின் மகன் சொல்வது போல, திமுகவும் வேறு தொழில் பார்க்க போகலாம் தானே? ஆர்.எஸ்.பாரதியின் மகனிடம் அந்த வேலை வாய்ப்பு சார்ந்த யோசனைகளை கேட்டு பெறலாம்..
-Mr. பழுவேட்டரையர்.
9/12/23
Comments
Post a Comment