இந்த மாதம் 13 திகதியன்று, யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் & கொலையை சுற்றி நிறைய கதைகளும், கட்டு கதைகளும் சமூக வலைத்தளங்களில் பின்னப்படுவதை காண கூடியதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களில் உண்மையோடு சேர்ந்து உண்மையான குற்றவாளிகளும் கதையோடு கதையா தொலைந்து போகிறார்கள். அதனால் நடந்த சம்பவத்தை பற்றியும், அதில் சாதியவாதத்தின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவு ஊடாக நாம் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இந்த பிரச்சனை பொன்னாலையில் இருந்து தொடங்கவில்லை. 2021/2022ஆம் ஆண்டு கால பகுதியில், அடைக்கலந் தோட்டம் கோவிலில் தான் இந்த பிரச்சனை தொடங்கியது. 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பவித்திரன் என்ற இளைஞன் வட்டுக்கோட்டையில் உள்ள அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வந்திருக்கிறார். கோவிலை சுற்றி வாழும் மக்கள் மத்தியில் வேளாளர்கள் மட்டும் முக்குவர் சமூகத்தை சேர்ந்த மக்களும் பெருமளவில் வாழ்ந்த...
The official website of @mrpaluvets from twitter