பொது வேட்பாளர் அணி எனும் இந்திய முகவர்கள். நான் தேர்தல் புறக்கணிப்பை ஆதரிப்பதற்கான காரணங்கள் 👇
▪️'பொது வேட்பாளர்' நிச்சயம் கட்சி அரசியலுக்கு வெளியே தான் இருப்பார் என்றார்கள். ஒரு பெண்ணாக இருப்பார் என்றார்கள். கடைசியில் தமிழரசு கட்சியில் இருந்து ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தி பிம்பிலிக்கி பிலாபி என்றார்கள்.
▪️பொது வேட்பாளர் கதையை தமிழர் அரசியல் வெளிக்குள் தொடக்கி விட்டவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் அனைவருமே இந்திய முகவர்களாக இருக்கிறார்கள்.
▪️80 சொச்சம் பொது அமைப்புகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தோடு இருப்பது என்னமோ 7 பேர் மட்டும் தான்.
▪️விக்கி, சுரேஷ், சித்தார்த்தன் போன்றவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலம் சார்ந்த சுய நலத்தின் அடிப்படையில் தான் இதில் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் ரணில் ஆதரவை உள்ளுக்குள் இருந்து திறட்டும் வேலையையும் செய்கிறார்கள்.
▪️ஒரு வருட காலமாக பொது வேட்பாளர் சார்ந்த எல்லா செய்யற்பாடுகளுமே தெளிவற்ற முறையில், மக்களை குழப்பும் விதத்தில் தான் நடந்து வந்திருக்கிறது. மக்களை எப்படியாவது வாக்கு நிலையங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது.
▪️இன்று வரை 'பொது வேட்பாளர்' எந்த கோரிக்கைகள்/கொள்கைகளை முன்னிறுத்தி நிற்பார் என்று தீர்மானிக்கப்படவில்லை.
▪️பொது வேட்பாளர் அணிக்குள் இருக்கும் டெலோ, மற்றும் பிற கட்சிகள் இன்னும் தனிப்பட்ட முறையில் சிங்கள வேட்பாளர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறது.
▪️பொது வேட்பாளர் பிரச்சாரமும் உருப்படியாக முன்னெடுக்கப்படவில்லை. வேட்பாளருக்கோ அந்த அணிக்கோ, வெற்றி பெரும் எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை.
▪️இன்னும் 20 சொச்சம் நாட்களுக்குள் இவர்கள் ஒட்டு மொத்த தாயாகத்தையும் ஓரணியில் திரட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இல்லை, அவர்களுக்கும் இல்லை.
▪️இந்த பொது வேட்பாளர் அணியின் திறனற்ற பிரச்சாரம் தோல்வியில் முடிந்து, சிங்கள வேட்பாளர்கள் பொது வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றால், அது ஒட்டு மொத்த தமிழர் தேசத்துக்குமே ஒரு பெரும் தலைக்குணிவாக போகும்..
▪️இந்த Riskஐ நங்கறிந்தும் பொது வேட்பாளர் அணி இன்னும் மெத்தனமாக இருப்பது, இவர்களின் உண்மையான நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்த குழப்பத்தில் சிக்கி எங்கள் அரசியலை பழியிடாமல்.
தெளிவாக சுலபமாக தேர்தலை புறக்கணித்து, ஒற்றுமையை நிலைநாட்டுவதே சிறந்த வழியாக இருக்கும்.
-Mr. பழுவேட்டரையர்
25/08/24
Comments
Post a Comment